மீண்டும் தோல்வியில் முடிந்த ஷாருக்கானின் முயற்சி: மீண்டும் சிறைக்கு சென்ற ஆர்யன் கான்
போதை பொருள் பயன்படுத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட ஷாருக்கானின் மகன் ஆர்யனுக்கு இன்றும் ஜாமீன் கிடைக்காத நிலையில், வரும் 13ம் தேதிக்கு வழக்கை தள்ளிவைத்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.
மகனை வெளியே எடுக்க முதலில் முயற்சித்த ஷாருக்கான் முடியாததால் மகனுக்கு ஆறுதல் மட்டும் தெரிவித்துவிட்டு கண்ணீர் மல்க மனைவியுடன் புறப்பட்டார்.
இது சம்பந்தமாக போதை மருந்து தடுப்பு பிரிவு தரப்பில் பதில் அறிக்கை கேட்கப்பட்டது. இன்று அதை தாக்கல் செய்யும்படி நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், இன்று விசாரணைக்கு வந்துள்ளது.
ஆனால் போதை மருந்து தடுப்பு பிரிவினர் பதில் அறிக்கை தாக்கல் செய்யாமல் கால அவகாசம் கேட்டுள்ளதால், இந்த வழக்கினை 13ம் திகதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
அன்று அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருக்கும் நிலையில், இன்றும் ஆர்யன் கானுக்கு ஜாமீன் கிடைக்காததால், மீண்டும் 2 நாட்கள் ஜெயிலில் இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.