ஷாஜகான் பட ஹீரோயின் ஞாபகம் இருக்குதா? வைரலாகும் தற்போதைய புகைப்படம்
விஜய் நடிப்பில் வெளிவந்த ஷாஜகான் படத்தில் கதாநாயகியாக நடித்த பிரபல நடிகையின் தற்போதைய புகைப்படம் வைரலாகி வருகின்றது.
ஷாஜகான்
தளபதி விஜய் நடிப்பில் கடந்த 2001ம் ஆண்டு வெளிவந்த வெற்றிப்படம் தான் ஷாஜகான். இப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்த நடிகை ரிச்சா பல்லோட்.
இவர் இப்படத்தின் மூலமே தமிழ் சினிமாவிற்குள் நுழைந்துள்ளார். இதற்கு முன்பு இந்தி, தெலுங்கு ஆகிய மொழி படங்களில் நடித்திருக்கின்றார்.

ஷாஜகான் பட வெற்றிக்கு பின்பு தமிழ் சினிமாவான அல்லி அர்ஜுனா, காதல் கிறுக்கன், உனக்கும் எனக்கும் போன்ற படங்களில் நடித்து பிரபலமானார்.
பின்பு படவாய்ப்புகள் குறைந்த நிலையில் சினிமாவை விட்டு ஒதுங்கியிருந்தார்.

தற்போதைய புகைப்படம் வைரல்
இந்நிலையில் நீண்ட இடைவேளைக்கு பின்பு ஆதி நடிப்பில் வெளிவந்த யாகாவாராயினும் நாகாக்க படத்தில் நடித்திருந்தார்.
இந்நிலையில் இவர் தற்போது எப்படியிருக்கின்றார் என்று ரசிகர்களுக்கு அவ்வளவாக தெரியாமல் இருந்துள்ளது. இந்நிலையில், நடிகை ரிச்சாவின் தற்போதைய புகைப்படம் வெளியாகியுள்ளது.
இப்புகைப்படத்தினை அவதானித்த ரசிகர்கள் ஷாஜகான் பட ஹீரோயினா இது என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |