ஷாருக்கானின் கட்அவுட்டுக்களை அடித்து நொறுக்கிய நபர்கள்: வைரலாகும் வீடியோ காட்சி
ஷாருக்கானின் திரைப்படத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து கட்அவுட்களை உடைத்துத்தள்ளியுள்ளனர்.
ஷாருக்கான்
பொலிவூட் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தான் ஷாருக்கான். இவரை பொலிவூட் கிங்கான் எனவும் அழைக்கப்படுகின்றார்.
பொலிவூட்டில் அடுத்தடுத்து சூப்பர்ஹிட் படங்களையும் கொடுத்து வருகின்றார். ஷாருக்கான் நடிப்பில் தற்போது தயாராகி வரும் ஜவான் மற்றும் டுங்கி ஆகிய படங்களையும் தயாரிக்கப்பட்டு வருகின்றன.
இதில் ஜவான் படத்தை அட்லீ இயக்கி வருகின்ற வேளையில் ஷாருக்கானிற்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சர்ச்சை
ஷாருக்கானின் புதிய திரைப்படமான பதான் திரைப்படம் இம்மாதம் 25 ஆம் திகதி வெளியாகவுள்ளதாக தயாரிப்புக்குழு அறிவித்திருந்தது.
இப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக தீபிகா படுகோனே நடித்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து பதான் திரைப்படத்தின் முதல் பாடல் ஒன்று வெளியாகி சமூக வலைத்தளங்களில் தீபிகாவின் ஆடைக்குறித்து பல சர்ச்சைகள் கிளம்பி ஓய்ந்தது.
போராட்டம்
குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் வஸ்திராப்பூர் பகுதியில் இயங்கி வரும் ஆல்பா ஒன் மாலில் பதான் பட விளம்பர நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் நடிகர் ஷாருக்கான், மற்றும் பிற நடிகைகள் இடம்பெற்றிருந்த புகைப்படங்கள், படத்தின் போஸ்டர்கள், பெரிய அளவிலான கட் அவுட்டுகள் வைக்கப்பட்டிருந்தன.
அவ்வேளையில் திடீரென உள் நுழைந்த விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் ஒரு பிரிவினரான பஜ்ரங்தள அமைப்பு தொண்டர்கள் போஸ்டர்களை கிழித்து எரித்து போராட்டம் செய்திருந்தனர்.
#BoycottPathanMovie
— Bajrang Dal Gujarat (@Bajrangdal_Guj) January 4, 2023
कर्णावती में आज बजरंगीयो ने #पठान की धुलाई की, सनातन धर्म विरोधी @iamsrk और टुकड़े गैंग की @deepikapadukone की मूवी अब नही चलने देंगे।
मल्टीप्लेक्स में जाकर चेतावनी दी, मूवी रिलीज की तो #बजरंगदल अपना तेवर दिखाए गा।
धर्म के सम्मान में BajrangDal मैदान में। pic.twitter.com/cth0STQRbj
இக்காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் பதிவு செய்யப்பட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றது.