Fact Check: லதா மங்கேஷ்கரின் இறுதி அஞ்சலியில் எச்சில் துப்பினாரா ஷாருக்கான்? வைரலாகும் வீடியோ
பிரபலமான பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் நேற்று(06-02-2022) காலை மறைந்தார். அவரது மறைவுக்கு பல திரைப்பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.
தாதரில் நடந்த இறுதிச் சடங்கு நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி, மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே, அவரது மனைவி ரேஷ்மி தாக்கரே, மகன் ஆதித்ய தாக்கரே, ஆளுநர் பகத்சிங் கொஷாரியா, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், சச்சின் தெண்டுல்கர், அவரது மனைவி அஞ்சலி, நடிகர் ஷாருக்கான்,
அமீர் கான், ரன்பீர் கபூர், ஜாவேத் அக்தர், நடிகை ஸ்ரத்தா கபூர் உட்பட ஏராளமான பிரபலங்கள் கலந்து கொண்டு மறைந்த பாடகி லதா மங்கேஷ்கருக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார்கள்.
இந்நிலையில், பாலிவுட் நடிகரான ஷாருக்கான் லதா மங்கேஷ்கருக்கு அஞ்சலி செலுத்துவதற்காக தனது செயலாளர் பூஜாவுடன் வந்தார். அப்போது அஞ்சலில் செலுத்திவிட்டு சில நொடிகர் பிரார்த்தனை செய்தார்.
பின்னர் இஸ்லாமிய முறைப்படி இரு கரங்களையும் வேண்டி பிரார்த்தை செய்துவிட்டு, முககவசத்தை எடுத்துவிட்டு காற்றில் ஊதுவார்.
ஆனால், அவர் லதா மங்கேஷ்கரின் சிதை அருகில் எச்சில் துப்பியதாக அதற்கும் மதசாயம் பூசி விமர்ச்சிக்க ஆரம்பத்துள்ளனர்.
மேலும், இது என்ன இப்படி ஒரு கலாச்சாரம் என திட்டி தீர்த்து வீடியோவை வைரலாக்கி வருகின்றனர்.
This is alsohttps://t.co/e1H9gwgw5x
— SHAHMIR (@shahmir40) February 6, 2022