விசாரணைக்கு பின் அதிரடியாக கைது செய்யப்பட்ட ஷாருக்கான் மகன்! சிக்கியது எப்படி?
மும்பையில் கப்பலில் போதை ஒழிப்புப்பிரிவு போலீசார் நடத்திய சோதனையில் பல கோடி மதிப்புள்ள போதை பொருள் சிக்கியது.
இந்த வழக்கில், பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கானிடமும் 20 மணி நேர விசாரணைக்கு பின்னர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.
டெல்லியைச் சேர்ந்த நிறுவனம் ஒன்றுடன் ஃபேஷன் டிவி இந்தியா இணைந்து கிரே ஆர்க் என்ற பெயரில் பிரம்மாண்ட நிகழ்ச்சியை சொகுசுக் கப்பலில் ஏற்பாடு செய்திருக்கின்றனர்.
இதனையடுத்து, இந்த நிகழ்ச்சியில் தான் போதைப் பொருள் பார்ட்டி நடைபெற்றிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த போதைப் பொருள் பார்ட்டி நடைபெற்றதில் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மகன் சிக்கியிருப்பது பாலிவுட் வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.
மேலும், இந்த விவகாரத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக் கானின் மகனான ஆர்யன் கானிடம், போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் விசாரணை நடத்தியிருப்பதாக தெரியவந்துள்ளது.
இந்நிலையில், சுமார் 20 மணிநேர தொடர் விசாரணைக்கு பின் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் உட்பட மூன்று பேர் கைதானதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விவகாரம் பாலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.