மகனை வெளியே கொண்டுவர துடித்த ஷாருக்கான்: ஆனால் நீதிமன்றம் கொடுத்த ஷாக்
போதைப் பொருள் பயன்படுத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட ஷாருக்கானின் மகன் ஆர்யன் கானின் காவலை நீட்டித்து மும்பை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
மும்பையிலிருந்து கோவா சென்ற கப்பலில் போதை பொருள் பயன்படுத்தி பார்ட்டி கொண்டாடிய நிலையில் 8 பேர் சம்பவ இடத்திலேயே கைது செய்யப்பட்டனர். இதில் ஷாருக்கானின் மகனும் ஒருவர் என்பது பேரதிர்ச்சியினை ஏற்படுத்தியது.
கப்பலிலிருந்து கைது செய்யப்பட்ட அனைவருக்கும் மருத்துவ பரிசோதனைக்கு பின்பு விசாரணைக்காக என் சி பி அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
நேற்றைய தினத்தில் மகனைக் காண சென்ற ஷாருக்கான் மகனின் அழுகையைக் கண்டு கண்கலங்கி ஆறுதல் கூறியதோடு, ஆர்யனின் தாய் அவருக்காக ஆசையாக கொண்டு சென்ற பர்கரைக் கூட கொடுக்கவிடாமல் அதிகாரிகள் தடுத்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று வரை காவலில் வைக்கப்பட நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், மகனை வெளியே கொண்டு வருவதற்கு ஷாருக்கான் பல முயற்சியினை செய்துள்ளார்.
ஆனால் நீதிமன்றமோ ஆர்யன் கான் காவலை 11ம் திகதி வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது. என் சி பி அதிகாரிகள் காவலில் அடைக்க ஆர்யனை அழைத்துச் சென்றுள்ளனர். இது மிகப்பெரிய ஏமாற்றத்தினை ஷாருக்கானுக்கு அளித்துள்ளது.
பிரபலங்கள் மற்றும் உறவினர்கள் ஷாருக்கானிற்கு ஆதரவு அளித்து வரும் நிலையில், அவர்களது குடும்பம் மிகவும் மனவருத்தத்தில் காணப்படுகின்றனர்.
ஆர்யன் வழக்கில் தற்போது பிரபல வழக்கறிஞர் சதீஷ் மனேஷிண்டே ஆஜராகி உள்ளார். அவர் இதற்கு முன்பு 1998 கறுப்பு பன்றி வேட்டையாடிய வழக்கில் சல்மான் கானுக்காகவும், 1993 ஆம் ஆண்டு பம்பாய் குண்டுவெடிப்பு வழக்கில் சஞ்சய் சிக்கிய போதும் வாதாடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.