இத்தாலியில் நடந்த கார் விபத்து.. நொடியில் உயிர் தப்பிய ஷாருக்கான் பட நடிகை!
இத்தாலியில் பயணம் மேற்கொண்ட பாலிவுட் நடிகை காயத்ரி ஜோஷி விபத்தில் சிக்கி உயிர் தப்பியதாக சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியாகியுள்ளது.
காயத்ரி ஜோஷி
கடந்த 2000 ஆம் ஆண்டு ஃபெமினா மிஸ் இந்தியா இன்டர்நேஷனல் போட்டியில் அழகியாக தெரிவு செய்யப்பட்டவர் தான் நடிகை காயத்ரி ஜோஷி.
இதனை தொடர்ந்து கடந்த 2004 ஆம் ஆண்டு ஷாருக்கான் நடிப்பில் வெளியான “ஸ்வேட்ஸ் ” என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.
இந்த திரைப்படம் விமர்சனம் அடிப்படையில் நல்ல வரவேற்பை பெற்றது.
தொடர்ந்து சினிமா பக்கம் ஆர்வம் இல்லாத காய்த்ரி தொழிலதிபர் விகாஸ் ஓபராய் என்பவரை 2005 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார், இவர்களுக்கு தற்போது இரண்டு குழந்தைகளும் இருக்கிறார்கள்.
இந்த நிலையில் காயத்ரி கணவருடன் தற்போது இத்தாலியில் வசித்து வருகிறார்.
நொடியில் உயிர்தப்பிய அதிர்ச்சி
சமீபத்தில் இத்தாலியில் சூப்பர் கார் டூர் நடைபெற்றது. இதில் பல ஆடம்பர கார்கள் கலந்து கொண்டது.
கார் முன்னால் செல்ல முயன்ற போது சாலையில் பக்கவாட்டில் பயணித்த வேனில் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் நடிகை காயத்ரி ஜோஷி மற்றும் விகாஸ் இருவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். மேலும் ஃபெராரி காரில் பயணித்த தம்பதியினர் இருவரும் உயிரிழந்தனர்.
இது குறித்து ஊடகங்களுக்கு காயத்ரி ஜோஷி கூறுகையில், “நானும் விகாஸும் இத்தாலியில் இருக்கிறோம். நாங்கள் இங்கே ஒரு விபத்தை சந்தித்தோம். கடவுள் அருளால் நாங்கள் இருவரும் நலமாக இருக்கிறோம்” என தெரிவித்துள்ளார்.
இந்த செய்தி கேட்டு காய்திரி ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளார்கள். அத்துடன் “ காய்திரி இப்படி நடந்து உயிர் தப்பியது கடவுள் அருள்..” என கருத்துக்களையும் பதிவு செய்து வருகின்றார்கள்.
Two deaths on a Ferrari in Sardina, Italy pic.twitter.com/skT3CaXg0T
— Globe Clips (@globeclip) October 3, 2023
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |