பறக்கும் முத்தம் கொடுத்து ரசிகர்களுக்கு ரமலான் வாழ்த்து சொன்ன ஷாரூக்கான் - வைரலாகும் வீடியோ
பறக்கும் முத்தம் கொடுத்து ரசிகர்களுக்கு ரமலான் வாழ்த்து சொன்ன ஷாரூக்கானின் வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
நடிகர் ஷாரூக்கான்
பாலிவுட் சினிமாத்துறையில் உச்ச நட்சத்திரமாக வலம் வருபவர் நடிகர் ஷாரூக்கான். இவருக்கு இந்தியாவில் மட்டுமல்ல, உலகளவிலும் ரசிகர்கள் பட்டாளம் அதிகம். இவருடைய நடிப்பில் சமீபத்தில் ‘பதான்’ படம் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் வெளியானது.
வசூல் சாதனையில் பல கோடிகளை அள்ளி உலக சாதனைப் படைத்தது.
ரமலான் வாழ்த்து சொன்ன ஷாரூக்கான்
இன்று பாலிவுட் நடிகர் ஷாரூக்கான் தன் இல்லத்தின் முன் குவிந்த ரசிகர்களுக்கு ரமலான் வாழ்த்து தெரிவித்தார்.
அப்போது, ரசிகர்களை பார்த்து பறக்கும் முத்தத்தை கொடுத்தார். இதைப் பார்த்ததும் அவரது ரசிகர்கள் ஆரவாரம் செய்து துள்ளி குதித்தனர். தற்போது இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த ரசிகர்கள் ஷாரூக்கானுக்கு ரமலான் வாழ்த்துக்களை தெரிவித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.
Shah Rukh Khan waving his fans #EidMubarak2023 pic.twitter.com/2oNosgKHfN
— RUPESH ₛₜₐₙ (@SRKianRupesh05) April 22, 2023