18 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ள சடாஷ்டக யோகம்: இந்த 3 ராசிக்காரங்க மே வரை கவனமா இருக்கணும்..
கேது மற்றும் குருபகவானின் பெயர்ச்சியால் சடாஷ்டக யோகம் உருவாகும் நிலையில் கவனமாக இருக்க வேண்டிய 3 ராசியினரை இங்கு தெரிந்து கொள்வோம்.
சடாஷ்டக யோகம்
நவ கிரகங்களின் நழல் கிரகமாக கருதப்படும் கேது ஒரு ராசியில் 18 மாதங்கள் சஞ்சரிப்பார். ஆனால் மீண்டும் அதே ராசிக்கும் வருவதற்கு சுமார் 18 ஆண்டுகள் ஆகுமாம்.
இந்நிலையில் கடந்த ஆண்டு அக்டோர் 30ம் தேதி கேது துலாம் ராசியிலிருந்து கன்னி ராசிக்கும் நுழைந்துள்ளதுடன், குறித்த ராசியில் 2025ம் ஆண்டு வரை இருப்பார்.
ஆனால் அதே வேளையில் தேவர்களின் குருவாக கருதப்படும் குரு பகவான் மேஷ ராசியில் பயணித்து வருகின்றார். இந்த சூழ்நிலையில் குரு கேதுவிலிருந்து 8 ஆவது வீட்டிலும், கேது, குருவிடமிருந்து 6 ஆவது வீட்டிலும் உள்ளார்.
இதனால் சடாஷ்டக யோகம் என்ற அசுப யோகம் உருவாகியுள்ளதுடன், இவை மே மாதம் 1ம் தேதியுடன் முடிகின்றது. ஏனெனில் குரு இந்த நாளில் ரிஷப ராசிக்கு குரு செல்ல உள்ளார்.
மேஷ ராசியில் உருவாகியுள்ள இந்த யோகத்தால் சில ராசியினருக்கு நன்றாக இருந்தாலும், சில ராசியினர் கவனமாகவே இருக்க வேண்டும். அந்த வகையில் இந்த சடாஷ்டக யோகத்தால் கவனமாக இருக்க வேண்டிய ராசியைக் குறித்து தெரிந்து கொள்ளலாம்.
மேஷம்
மேஷ ராசியினர் இந்த யோகத்தால் கவனமாக இருக்க வேண்டும். பல சவால்களை சந்திக்க வேண்டியுள்ளதுடன், ஆரோக்கியத்தில் கவனம் தேவை. செலவுகளால் சிரமப்படுவதுடன், கடன் பிரச்சினையையும் ஏற்படும். குடும்பத்தில் பிரச்சினைகள், வாக்குவாதங்கள் அதிகரிக்கும்.
கடகம்
கடக ராசியினரும் இந்த யோகத்தால் கவனமாக இருக்கவும். உடன் பிறந்தவர்களுடனான உறவு மோசமடைவதுடன், மனம்விட்டு வெளிப்படையாக பேசாமல் பிரச்சினை அதிகரிக்கும். 10வது வீட்டில் இந்த யோகம் உருவாகியிருப்பதால் கேது நல்ல பலன்களை தரமுடியாது. பணியிடத்தில் கவனம் இல்லை என்றால் வேலையை இழக்க நேரிடும்.
தனுசு
தனுசு ராசியினருக்கு இந்த யோகம் பிரச்சினையை ஏற்படுத்துவதுடன், பணிபுரிபவர்கள் வேலையில் தடையையும், சவால்களையும், பிரச்சினையையும் சந்திப்பீர்கள். வியாபாரிகள் எந்த ஒரு முடிவை எடுப்பதற்கு முன்பும் நன்கு யோசிக்க வேண்டும். இல்லாவிட்டால் நஷ்டத்தை சந்திக்க நேரிடும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |