சூரியன் - ராகுவால் உருவான சடாஷ்டக யோகம்: இந்த ராசிக்காரர்கள் ஆகஸ்ட் 17 வரை கவனம்!
ஜோதிட சாஸ்திரத்தின்படி, இரண்டு கிரகங்கள் ஒன்றுக்கொன்று 6 மற்றும் 8-வது வீட்டில் அமைந்தால் அதனை 'சடாஷ்டக யோகம்' என்று அழைக்கப்படுகிறது.
இந்த யோகம் பொதுவாக அசுபமான அமைப்பாகக் கருதப்படுவதுடன், வாழ்க்கையில் பல்வேறு சவால்கள் மற்றும் எதிர்பாராத சூழ்நிலைகளை உருவாக்கும் காலமாகவும் ஜோதிடத்தில் குறிப்பிடப்படுகிறது.

கிரகங்களின் பெயர்ச்சி மற்றும் அவற்றின் பரஸ்பர நிலைகள் அனைத்து ராசிகளின் வாழ்க்கையிலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் என ஜோதிட நம்பிக்கை கூறுகிறது.
அந்த வகையில், ஜூலை 16, 2026 முதல் சூரியன் மற்றும் ராகு ஆகிய கிரகங்களின் அமைப்பால் 'சடாஷ்டக யோகம்' உருவாகியுள்ளது. இந்த யோகத்தின் தாக்கம் ஆகஸ்ட் 17, 2026 வரை, நீடிக்கும் அதன் தாக்கத்தால் பெருமளவில் பாதக விளைவுகளை சந்திக்கப்போகும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்தக் காலகட்டத்தில் பணியிடத்தில் மேலதிகாரிகளுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. எனவே, எந்த விஷயத்திலும் உணர்ச்சிவசப்பட்டு பேசாமல், பொறுமையுடனும் நிதானத்துடனும் அணுகுவது நல்லது.
குறிப்பாக, வார்த்தைகளில் கடுமையைத் தவிர்ப்பது தேவையற்ற பிரச்சினைகளைத் தவிர்க்க உதவும். உங்கள் பணியில் முழு கவனத்தையும் செலுத்தினால் நல்ல பலன்களைப் பெறலாம். மேலும், முதலீடு, கடன், சொத்து வாங்குதல் போன்ற நிதி தொடர்பான முக்கிய முடிவுகளை அவசரமாக எடுக்காமல், அனைத்து அம்சங்களையும் ஆராய்ந்து முடிவு செய்வது நன்மை தரும்.
மிதுனம்

மிதுன ராசிக்காரர்கள் தங்கள் தொழில் மற்றும் பணியில் முன்னேற்றத்தை அடைய தன்னம்பிக்கையுடனும் தைரியத்துடனும் செயல்பட வேண்டிய காலம் இது.
புதிய திட்டங்கள் அல்லது புதிய வாய்ப்புகள் உங்கள் வாழ்க்கையில் உருவாகக்கூடும். அவற்றை சரியாகப் பயன்படுத்தினால் வளர்ச்சிக்கான பாதை திறக்கும்.
இருப்பினும், பெரிய முதலீடுகள் அல்லது முக்கிய முடிவுகளை எடுப்பதற்கு முன் அனைத்து சூழ்நிலைகளையும் நன்கு ஆராய்ந்து செயல்படுவது அவசியம். அவசரப்பட்டு எடுக்கும் முடிவுகள் எதிர்பாராத நிதி இழப்புகளையோ அல்லது சிரமங்களையோ ஏற்படுத்தக்கூடும்.எனவே, பொறுமையும் திட்டமிடலும் இந்தக் காலத்தில் மிகவும் முக்கியம்.
துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இந்தக் காலகட்டம் சற்று சவாலானதாக இருக்கலாம். குடும்பத்தில் சிறிய கருத்து வேறுபாடுகள் அல்லது பதற்றமான சூழ்நிலைகள் உருவாக வாய்ப்புள்ளதால், அனைவரிடமும் அமைதியான அணுகுமுறையை கடைப்பிடிப்பது நல்லது.
பேசும்போது கோபம் அல்லது கடுமையான வார்த்தைகளை இந்த காலகட்டத்தில் தவிர்ப்பது சிறப்பு, அதிக நிதியை முதலீடு செய்யும் விடயங்களில் சற்று ஜாக்கிரதையாக இருக்கவேண்டியது அவசியம்.குறிப்பாக வாக்குவாதங்களை தவிர்து தங்களின் வேலையில் மாத்திரம் கவனம் செலுத்தினால் பாதிப்புகளை குறைத்துக்கொள்ளலாம்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |