துபாயில் மாஸ் காட்டும் சீரியல் நடிகை ஷபானா! என்ன பண்ணிருக்காங்கன்னு பாருங்க
செம்பருத்தி சீரியல் மற்றும் குக் வித் கோமாளி புகழ் நடிகை ஷபானா தனது நெருங்கிய நண்பர்களுடன் துபாய்க்கு சுற்றுலா சென்று தற்போது வெளியிட்டுள்ள அழகிய புகைப்படங்கள் இணையத்தில் அசுர வேகத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது.
நடிகை ஷபானா
பிரபல தொலைக்காட்சியில் 1000 எப்பிசோடுகளை கடந்து ஒளிபரப்பான செம்பருத்தி சீரியல் மூலம் பார்வதியாக சின்னத்திரை ரசிகர்கள் மனதில் நீங்காதாத இடம் பிடித்தவர் தான் நடிகை ஷபானா.

செம்பருத்தி சீரியல் மக்களின் அமோக வரவேற்பை பெற்றதுடன் அவரின் அடையாளமாகவே மாறிவிட்டது.
அதனை தொடர்ந்து பிரபல தொலைக்பாட்சியில் ஒளிபரப்பான மிஸ்டர் மனைவி என்ற தொடரில் நடித்து வந்த ஷபானா, அதிலிருந்து இடையிலேயே வெளியேறிவிட்டார்.

அதற்கிடையில் பாக்கியலட்சுமி சீரியல் புகழ் நடிகர் ஆர்யனை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
கடும் எதிர்ப்புகளையும் மீறி இருவரும் திருமண வாழ்க்கையில் மகிழ்சியாகவும் மற்ற தம்பதிகளுக்க முன்னுதாரணமாகவும் இருந்து வருகின்றனர்.

ஷபானா குக் வித் கோமாளி சீசன் 6 நிகழ்சியில் குக்காக பங்கேற்று ரன்னர் அப் ஆக தேர்வானார். குக்வித் கோமாளியும் இவருக்கு என தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிக் கொடுத்தது என்றால் மிகையாகாது.

அதனை தொடர்ந்து போலீஸ் போலீஸ் என்ற ஒரு வெப் தொடரிலும் நடித்து தற்போது வருகின்றார். இந்நிலையில் தனது நெருங்கிய நண்பர்களான சின்னத்திரை பிரபலங்களுடன் துபாய்க்கு சுற்றுலா சென்று செம மாஸான லுக்கில் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் லைக்குகளை அள்ளிவருகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |