ரகசியமாக முடிந்த நிச்சயதார்த்தம்? நடிகை பார்வதியின் மாப்பிள்ளை இவரா? ஷாக்கான ரசிகர்கள்
பிரபல சீரியல் நடிகையான ஷபனாவுக்கு ரகசிய நிச்சயதார்த்தம் முடிந்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும், செம்பருத்தி சீரியல் மூலம் பிரபலமானவர் தான் நடிகை ஷபானா. இவருக்கு என்று ஒரு தனி ரசிகர் கூட்டம் உள்ளது.
இந்நிலையில், பாக்கியலட்சுமி சீரியலில் நடித்து வரும், ஆர்யன் என்பவருக்கும், இவருக்கும் ரகசிய நிச்சயதார்த்தம் ஆகிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஏனெனில், பல முறை ஆர்யன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ஷாபனாவை தான் ஷா..பூ..த்ரி என்று செல்லமாக அழைப்பார்.
தற்போது அதை உறுதி செய்யும் வகையில், சில மணி நேரங்களுக்கு முன் புகைப்படம் ஒன்றை ஆர்யன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அதில், அவர் மற்றும் மற்றொருவரின் கை உள்ளது. இதில் இருவரின் கைகளிலும் நிச்சயதார்த்த மோதிரம் போன்று உள்ளது.
இதைக் கண்ட திரைப்பிரபலங்கள் பலரும் தங்கள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். குறிப்பாக ஷபனாவின் நெருங்கிய தோழியான ரேஷ்மா முரளிதரன் வாழ்த்துக்களை குறிப்பிட்டுள்ளார்.