திடீர் விவாகரத்தா? ஒட்டுமொத்தமாக முற்றுப்புள்ளி வைத்த செம்பருத்தி ஷபானா
சமீபத்தில் திருமணம் செய்து கொண்ட பிரபல நட்சத்திர ஜோடிகரான ஷபானா- ஆர்யன் விரைவில் விவாகரத்து செய்யப்போகிறார்கள் என்ற தகவல் காட்டுத்தீயாய் பரவி வந்தது.
செம்பருத்தி சீரியல் மூலம் பிரபலமான நடிகை ஷபானா, பாக்கியலட்சுமி சீரியலில் நடித்து வருபவர் ஆர்யன்.
இவர்கள் இருவரும் வெவ்வேறு மதத்தை சேர்ந்தவர்கள் என்றாலும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
திருமணமான சில வாரங்களிலேயே இருவரும் பிரியப்போகிறார்கள் என்றெல்லாம் புரளி கிளம்பியது.
இதற்கு இருவரும் வாய்திறக்காமல் இருந்த நிலையில், கணவருடன் ஒன்றாக கிறிஸ்துமஸ் கொண்டாடிய புகைப்படத்தை பதிவிட்டிருந்தார் ஷபானா.
இந்நிலையில் நண்பர்களுடன் வெளியே சென்றிருந்த போது, ஆர்யனுடன் பேசும் வீடியோவை பகிர்ந்து ஒட்டுமொத்தமாக முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.