ரசிகர்கள் மத்தியில் ஹீரோவாக திகழ்ந்து கொண்ருக்கும் விக்ரம், யார் இவர்?
இந்தியா சினிமாவை முழு உலகையும் திரும்பி பார்க்க வைத்த படமாக பொன்னியின் செல்வன் திரைப்படம் பார்க்கபடுகிறது.
இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த விக்ரமின் நடிப்பு, திரையுலகையே அலற வைத்துள்ளது.
இந்த நிலையில் பொன்னியின் செல்வன் திரைப்பட விழாவின் போது விக்ரம் பெயரை கூறியதும் ரசிகர்கள் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளனர்.
அந்த வகையில் இவ்வளவு வர வேற்பை பெற்று ரசிகர்கள் மத்தியில் ஹீரோவாக திகழ்ந்து கொண்ருப்பவர் யார் இவர்? தமிழ் சினிமாக்குள் எப்படி வந்தார்? பொன்னியின் செல்லன் திரைபடத்தில் ஏன் இவ்வளவு முக்கியம் பெறுகிறார்? இவரின் பங்கு தான் என்ன? இந்த படைப்பின் முக்கிய கதாபாத்திரமாக திகழும் சீயான் விக்ரம் குறித்து தெரிந்துக் கொள்வோம்.
ரசிகர்கள் மத்தியில் ஹீரோவாக திகழ்ந்து கொண்ருக்கும் விக்ரம், யார் இவர்?
இவர் சென்னையில், 17ம் ஏப்ரல் 1965ஆம் ஆண்டு ஜான் விக்டருக்கும் ராஜேஸ்வரிக்கும் மகனாக பிறந்தார்.
இவரது இயற்பெயர் கென்னெடி என்பதாகும் மற்றும் விக்ரமின் தந்தை வினோத் ராஜ் எனும் ஜான் விக்டர், முன்னாள் இந்திய ராணுவ வீரர் மற்றும் நடிகராவார். இவருக்கு அனிதா என்கிற தங்கையும் அர்விந்த் என்கிற தம்பியும் உள்ளனர்.
இவர் தந்தையாரின் கட்டாயத்தால் முதுகலை வணிக மேலாண்மை படிப்பை இலயோலாக் கல்லூரியில் படித்து முடித்துள்ளார்.
கல்லூரி பருவத்தில் ஒரு விபத்தில் இவரது காலில் இருபத்து மூன்று அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளது.
தொடர்ந்து இவர் 1992 ஆம் ஆண்டு சைலஜா பாலகிருஷ்ணன் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
இவருக்கு துருவ் விக்ரம் என்ற ஒரு மகனும் அக்ஷிதா விக்ரம் என்ற ஒரு மகளும் உண்டு. இவரின் மகன் துருவ் விக்ரம் தற்பொழுது திரைப்படங்களில் நடித்து வருகின்றார்.
தமிழ் சினிமாக்குள் எப்படி வந்தார்?
விக்ரம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாவதற்கு முன் 1988 ஆம் கைலாசம் பாலசந்தர் இயக்கிய கலாட்டா குடும்பம் என்ற தொலைக்காட்சி தொடரில் நடித்து வந்துள்ளார்.
இதனை தொடர்ந்து 1990 ஆம் ஆண்டு வெளியான என் காதல் கண்மணி என்னும் படத்தின் மூலம் அறிமுகம் சினிமாவிற்குள் அறிமுகமானார்.
இவரின் முதல் படம் எதிர்பார்த்த வெற்றியை தராவிட்டாலும் அவரது சேது திரைப்படம் மக்களின் மனதில் இடம் பிடிக்க வாய்ப்பாக அமைந்தது.
இந்த திரைப்படம் தான் அவரது வாழ்க்கையை அடுத்தக் கட்ட நகர்விற்கு கொண்டு சென்றது என்று கூட சொல்லலாம்.
இதனை தொடர்ந்து பல வேடங்களில் தமிழ் சினியுலகையே அசத்தியுள்ளார். இவரது படங்களில் உள்ள கதாபாத்திரமாகவே மாறி நடிப்பதில் வல்லவர் என்றே கூறலாம்.
விக்ரம் தனது யதார்த்தமான நடிப்பில் தமிழ் சினிமாவில் விஜய், அஜித், சூர்யாவை விட அதிகமான ரசிகர் பட்டாளத்தைக் கொண்டுள்ளார்.
பொன்னியின் செல்லன் திரைபடத்தில் ஏன் இவ்வளவு முக்கியம் பெறுகிறார்?
மணிரத்னம் மறைந்த எழுத்தாளர் கல்கி எழுதி புகழ்பெற்ற வரலாற்றுப் புனைவு நாவலான பொன்னியின் செல்வனை பல ஆண்டுகால முயற்சிக்கு பின் படமாக எடுத்துள்ளார்.
இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இதில் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள நிலையில் பொன்னியின் செல்வன் முதல் பாகம் வெளியாகியுள்ளது.
இந்த படத்தில் விக்ரம், கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், ஜெயம்ரவி, ஜெயராம் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்திருந்தனர்.
இந்நிலையில் மக்கள் மத்தியில் பெறும் வரவேற்பை பெற்ற கதாபாத்திரமாக ஆதித்த கரிகாலன் பார்க்கபடுகிறார்.
முக்கிய கதாபாத்திரத்தில் பட்டைய கிழப்பியிருக்கிறார் விக்ரம். இவரது யதார்த்தமான நடிப்பு திறமையின் தான் இன்று இவரது வெற்றிக்கு காரணமாக அமைந்திருக்கிறது.
Response for my thalaivan @chiyaan ?️?#PonniyanSelvan #Chiyaan61 pic.twitter.com/V6iwtqweED
— Veera (@Vikram__Trends) October 2, 2022
விக்ரமின் நடிப்பை பார்த்து ரசிகர்கள் பலர் அவரை வாழ்த்தி பல பதிவுகளை அவர்களது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து வருகின்றனர்.
Thank you Mr.N Ramachandran, Proprietor, Sound and Syllables ?#AdithaKarikalan #ChiyaanVikram? #PS1 #PonniyanSelvan1@chiyaan @sooriaruna @Kalaiazhagan15 @proyuvraaj @mugeshsharmaa pic.twitter.com/5dWJqgmiaH
— Chiyaan Vikram Fans (@chiyaanCVF) October 3, 2022
இந்நிலையில் தற்போது பொன்னியின் செல்வன் திரைப்படம் முதல் நாளில் உலகம் முழுவதும் செய்துள்ள வசூல் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. ஆம், அதன்படி இப்படம் மூன்று நாட்களில் மட்டும் ரூ.230+ கோடிகள் வசூல் செய்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
மேலும் இத்திரைப்படத்திற்கு பல பிரபலங்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.