2026-ல் உருவாகும் கொடிய விஷபோதக யோகம் - கெட்ட காலம் ஆரம்பமாகும் ராசிகள்
பிப்ரவரி மாதத்தில் செவ்வாய் பகவான் ராகுவுடன் இணைந்து விஷபோதக யோகத்தை உருவாக்குகிறார். இதன் காரணமாக சில ராசிக்காரர்கள் வாழ்க்கையில் கஷ்டத்தை அனுபவிக்க உள்ளனர். அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
விஷபோதக யோகம் 2026
2026 ம் ஆண்டு பிப்ரவரி 23-ம் தேதி செவ்வாய் பகவான் கும்ப ராசிக்குள் நுழையும்போது, அங்கு ஏற்கனவே இருக்கும் ராகுவுடன் இணைந்து 'அங்காரக யோகம்' (விஷபோதக யோகம்) உருவாகிறது.
செவ்வாய் 45 நாட்களுக்கு ஒரு முறை தனது ராசியை மாற்றுகிறார். பிப்ரவரி 23, 2026 காலை 11:57 மணிக்கு கும்ப ராசியில் நுழையும் செவ்வாய் பகவான், ஏப்ரல் 2, 2026 வரை அந்த ராசியிலேயே பயணிப்பார்.
நெருப்பு கிரகமான செவ்வாயும், நிழல் கிரகமான ராகுவும் இணைவது ஒரு வெடிக்கும் தன்மையுள்ள ஆற்றலை உருவாக்கும். இதனால் ஏப்ரல் 2, 2026 வரை சில ராசிக்காரர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

மேஷம்
- மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு விஷபோதக யோகம் வாழ்க்கையில் சில பிரச்சனைகளை உருவாக்கக்கூடும்.
- 11 ஆம் வீடான லாப ஸ்தானத்தில் செவ்வாய் மற்றும் ராகுவின் சேர்க்கை நிலை இருக்கிறது. இதனால் ஆசைகள் நிறைவேறாமல் போகலாம்.
- சிறிய வேலைகளுக்கு கூட அதிக முயற்சி தேவைப்படக்கூடும். வேலை செய்யும் இடத்தில் பிரச்சனை வரும் இதனால் மன அழுத்தம் அதிகமாகும்.
- மேஷ ராசிக்கு ஏழரை சனியும் நடைபெறுவதால் உங்கள் ஆரோக்கியம் மோசமாகும். இந்த காலகட்டத்தில் உங்கள் தந்தையின் உடல்நலத்தில் மிக கவனத்துடன் இருக்க வேண்டும்.
தனுசு
- தனுசு ராசிக்கு மூன்றாம் வீட்டில் செவ்வாய் மற்றும் ராகுவின் சேர்க்கை நடைபெற இருக்கிறது. மேலும் தனுசு ராசிக்கு அர்த்தாஷ்டம சனி நடைபெற்று வருகிறது.
- இதன் காரணமாக தனுசு ராசிக்காரர்களின் ஆரோக்கியத்தில் எதிர்மறையான தாக்கம் ஏற்படலாம். பிப்ரவரி தொடங்கி ஏப்ரல் வரை ஆரோக்கியத்தில் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும்.
- மன அழுத்தம், உடல் நலனில் மந்த நிலை மற்றும் தேவையற்ற குழப்பங்கள் ஏற்படலாம்.
- தொழில்களில் நஷ்டம், முதலீடுகளில் நிதி இழப்புகள் போன்றவற்றை சந்திக்க நேரிடும். இந்த காலகட்டத்தில் குடும்ப விஷயங்களை பொறுமையாக கையாள்வது அவசியம்.
- எதை பேசுவதாக இருந்தாலும் பேச்சில் நிதானம் தேவை.
மகரம்
- மகர ராசியின் இரண்டாம் வீட்டில் விஷபோதக யோகம் உருவாகிறது. இது தன ஸ்தானம் என்பதால் இந்த ராசியில் பிறந்தவர்கள் நிதி இழப்புகளை சந்திக்க நேரிடும்.
- முதலீடுகளை செய்வதற்கு முன்னர் கவனமாக இருக்க வேண்டும். உடல்நலன் குறித்த கவலைகளும் ஏற்படலாம். மருத்துவச் செலவுகள் அதிகரிக்கலாம்.
- உடன் பிறந்தவர்களின் உடல்நிலையில் பின்னடைவுகள் ஏற்படலாம். தேவையற்ற பண விரயம், குடும்பத்தில் வாக்குவாதங்கள், கண் தொடர்பான உபாதைகள் ஏற்படும்.
- பண கொடுக்கல் வாங்கள் பரிவர்த்தனை போன்றவற்றில் கவனம் தேவை. வாகனங்களை இயக்கும்பொழுது நிதானம் அவசியம்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).