இன்று பெயர்ச்சியடையும் செவ்வாய்... தொடர்ந்து 43 நாட்களுக்கு கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள்
நவக்கிரகங்களுக்கு அதிபதியான செவ்வாய் பகவான் ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்கு 45 நாட்களுக்கு ஒரு முறை இடப்பெயர்ச்சி அடைகிறார். அந்தவகையில், இன்று மாலை 5.58 மணிக்கு, செவ்வாய் கிரகம் கன்னி ராசியில் இருந்து வெளியேறி துலாம் ராசிக்கு நுழையவிருக்கிறார்.
இவர் துலாம் ராசியில் 43 நாட்களுக்கு தங்கியிருப்பார். 43 நாட்களுக்குப் பிறகு அதாவது நவம்பர் 16ஆம் திகதி துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு செல்வார். இந்தப் பெயர்ச்சியில் பல ராசிக்காரர்களுக்கு பல பிரச்சினைகள் ஏற்படும்.
அதில் சிலருக்கு இந்த பெயர்ச்சி அவர்களின் வாழ்க்கையின் புதிய திருப்புமுனையாக இருக்கும். அந்தவகையில், இந்த செவ்வாய்ப் பெயர்ச்சியில் கவனமாக இருக்க வேண்டிய 4 ராசிக்காரர்கள் யார் யார் என்பதை பார்ப்போம்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த செவ்வாய் பெயர்ச்சியில் சற்று கவனமாக இருக்க வேண்டும். இந்த காலத்தில் உங்களுக்கு அதிக நிதிப் பிரச்சினைகள் ஏற்படும். குடும்பத்தில் அடிக்கடி வாக்குவாதங்கள் எற்படும். வாகனம் ஓட்டுபவர்களும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இந்தக் காலத்தில் அசுப செய்திகளும் வரும்.
கடகம்
செவ்வாய்ப் பெயர்ச்சியில் கடக ராசிக்காரர்களுக்கு தொழிலில் கொஞ்சம் பிரச்சினைகள் வந்து வந்து போகும். அதிகமான சவால்களை சந்திக்க நேரிடும். திருமண வாழ்க்கையில் கருத்து வேறுபாடுகள் ஏற்படும். பண முதலீடு செய்யும் முடிவுகளை எடுக்கும் போது கவனமாக செயற்படுங்கள்.
தனுசு
செவ்வாய் பகவான் துலாம் ராசியில் அமர்வதால் தனுசு ராசிக்காரர்களுக்கு சில பிரச்சினைகள் ஏற்படும். குடும்பத்தில் உறவினர்களுடன் அடிக்கடி சண்டைகள் ஏற்படும். தொழிலும் அதிக சவால்களை சந்திப்பீர்கள், நிதிப்பிரச்சினை, மன அழுத்தம் என்பனவும் ஏற்படும்.
கும்பம்
செவ்வாய் பெயர்ச்சி காலத்தில் கும்பராசிக்காரர்களுக்கு நடக்கும் சில விடயங்கள் மன அழுத்தத்தை ஏற்படுத்தும். இந்தக் காலத்தில் மன அமைதியில்லாமல் இருப்பீர்கள், குடும்ப பிரச்சினை, நண்பர்களுடன் பிரச்சினை என்பன ஏற்பட்டுக் கொண்டிருக்கும். தொழில் செய்யும் இடங்களிலும் ஒரு போராட்டமாக இருக்கும். இந்த நேரத்தில் கோபத்தை கட்டுப்படுத்தி கவனமாக செயல்படுவது சிறந்தது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |