கணவர் இறந்து 4 ஆண்டுகள்... பிள்ளைகள் பற்றி பேசிய நடிகர் சேதுராமனின் மனைவி
நடிகர் சேதுராமனின் மனைவி உமா சேதுராமன் தன் குழந்தைகள் வளர்ப்பு பற்றி யூடியூப் சேனல் ஒன்றிற்கு பேட்டி கொடுத்துள்ளார்.
2013ஆம் ஆண்டு வெளியான 'கண்ணா லட்டு தின்ன ஆசையா' படத்தின் மூலம் பிரபலமானவர் சேதுராமன்.
நடிகர் சந்தானத்தின் நெருங்கிய நண்பர் என்பதால் தமிழ்த் திரைப்படத்துறையில் கால் பதிப்பதற்கு நடிகர் சந்தானம் பெரும் உதவியாக இருந்தார்.
'லட்டு தின்ன ஆசையா படம் உட்பட வாலிப ராஜா, சக்க போடு போடு ராஜா மற்றும் 50/50' என நான்கு திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இவர் தோல் நோய் மருத்துவராக சென்னையில் தனியாக கிளினிக் நடத்திவந்தார்.
இவருக்கும் கடந்த 2016 ஆம் ஆண்டு உமையாள் என்பவருடன் திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
சேதுராமனின் இறப்பிற்கு பின்னர் தன் குழந்தைகளுக்காக வாழும் உமையாள் தன் குழந்தைகளை எவ்வாறு வளர்க்க வேண்டும் என்பது குறித்து ஒரு பேட்டியில் பேசியுள்ளார்.
அவர் கூறியபோது 'நான் சேதுராமனுடன் நான்கு வருடங்கள் வாழ்ந்துள்ளேன். அவருடன் வாழ்ந்த ஒவ்வெரு நாளும் எனக்கு ஒவ்வொரு நினைவுகளுடன் கலந்துள்ளது.
குழந்தை வளர்ப்பை பொறுத்தவரை நாங்கள் அவர்களை இப்படி வளர்க்க வேண்டும், அப்படி வளர்க்க வேண்டும் என்று நினைத்ததில்லை.
எங்கள் குழந்தைகள் ஒரு போதும் 'நாங்கள் நல்ல வசதியாக ஒரு பிரச்சனையும் இல்லாமல் வாழ்கிறோம்' என நினைத்து விட கூடாது.
அவர்கள் நாளை கமூகத்தில் தனியாக முகங்கொடுக்கும் போது தோல்விகளை சந்திக்க நேரிடும். அதனை எதிர்கொண்டு முன்னோக்கி செல்ல வேண்டும்.
அதேபோல அவர்கள் அவர்களை விட சிறியவர், பெரியவர், உறவினர்கள், வசதி என்று நினைக்க கூடாது.
குழந்தைகள் எப்படி வளர வேண்டும் என நாம் நினைக்கிறோமோ அப்படியே அவர்கள் முன்னிலையில் நாம் நடந்து கொள்ள வேண்டும்' என கூறினார்.