ஒரிஜினலுக்கே டஃப் கொடுக்குறாங்களே! சுவீடன் தம்பதியினருக்கு குவியும் லைக்குகள்
விஜய் சேதுபதி நடப்பில் வெளியாகி பெரியளவில் ஹிட் கொடுத்த சேதுபதி ஐ.பி.எஸ் திரைப்படத்தில் இடம்பெற்ற ஒரு முக்கிய காட்சியை சுவீடன் நாட்டை சேர்ந்த தம்பதியினர் அச்சு அசல் அப்படியே ரீகிரியேட் செய்து வெளியிட்டுள்ள காணொளி இணையத்தில் படு வைரலாகி வருவதுடன் லைக்குகளையும் குவித்து வருகின்றது.
தற்காலத்தில் சமூக ஊடகங்கள் இன்றி யாராலும் ஒரு நாளை கூட முழுமையான கடந்த முடியாத நிலை உருவாகிவிட்டது என்றால் மிகையாகாது.

அந்தளவுக்கு சமூக வலைத்தளங்கள் மனிதர்களின் வாழ்வில் ஒரு முக்கிய அங்கமாகவே மாறிவிட்டது. இதில் தீய பக்கம் இருந்தாலும், தனிமையில் இருப்பவர்களுக்கு சமூக ஊடகங்கள் ஓர் வரப்பிரசாதம் என்று தான் கூற வேண்டும்.
அப்படி நாளுக்கு நாள் சமூக ஊடகங்களில் பதிவேற்றப்படும் ஏராளமான காணொளிகளுள் குறிப்பிட்ட சில காணொளிகள் இணையத்தில் வைரலாவது வழக்கம்.
அந்தவகையில், சுவீடன் நாட்டு தம்பதியினர் சேதுபதி ஐ.பி.எஸ் திரைப்படத்தில் இடம்பெற்ற ஒரு முக்கிய காட்சியை கொஞ்சமும் பிசகாமல் அப்படியே ரீகிரியேட் செய்து வெளியிட்டுள்ள காணொளியொன்று தற்போது இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |