இணையத்தில் வைரலாகும் விஜயகாந்தின் மாஸ் காட்சி! இன்று பொம்மையாக இருப்பவரின் கம்பீரத்தை பாருங்க
இன்று பிறந்தநாள் கொண்டாடும் விஜயகாந்த் நடிகராக இருந்த போது எந்தவொரு இளம் நடிகர்களும் நடிக்கத் தயங்கும் காட்சியினை மிகவும் அசால்ட்டாக நடித்துள்ள காட்சியை இன்று ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த்
தமிழ் திரையுலகில் தன்னிகரற்ற நடிகராக வலம் வந்தவர் விஜயகாந்த். கேப்டன் என செல்லமாக ரசிகர்களால் அழைக்கப்படும் இவர் 150 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
முதன்முதலில் ரசிகர்கள் மன்றம் ரசிகர்கள் இவருக்குத் தான் தொடங்கினர். பின்பு தேமுதிக தலைவராக இரண்டு முறை மிகப்பெரிய வெற்றி பெற்றார். மக்கள் பணிக்காக தன்னை அர்ப்பணித்து கொண்ட விஜயகாந்த் யாரும் பசியுடன் இருக்கக்கூடாது என்று இலவச உணவுகளை வழங்கினார்.
அதுமட்டுமில்லாமல் நடிகர் சங்கத்தின் தலைவராகவும் இருந்து பல கோடி ரூபாய் கடன்களை அடைத்துள்ளார்.

HBD Captain ? pic.twitter.com/H8ZI67Teoc
— Vignesh Theni (@Vignesh_twitz) August 25, 2022
இன்று வைரலாகும் காட்சி
விஜயகாந்த் நடிப்பில் 1994 ஆம் ஆண்டு வெளிவந்த சூப்பர் ஹிட் படம் தான் சேதுபதி ஐபிஎஸ். ஏவிஎம் ப்ரொடக்ஷன் தயாரித்த இந்த படத்தை பி.வாசு இயக்கி இருந்தார்.
பெரும் வரவேற்பை பெற்ற இந்த படத்தில் டூப் இல்லாமல் ஸ்டண்ட் காட்சிகளை மேற்கொண்டுள்ளார் விஜயகாந்த்.
இன்றைய தலைமுறை நடிகர்கள் பலரும் சின்ன சின்ன சண்டை காட்சிகளை செய்வதற்கே பயப்படுவதாக கூறப்படும் நிலையில் விஜயகாந்த் மணிக்கூண்டில் டூப் இல்லாமல் ஸ்டண்ட் செய்வது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதை கண்ட ரசிகர்கள் பலரும் விஜயகாந்தை போற்றி புகழ்ந்து வருகின்றனர்.