வழுக்கையான இடத்தில் 20 நாட்களில் முடி வளரும் சீரம் - ஆய்வாளர்கள் கண்டுபிடிப்பு
தற்போது தைவானை சேர்ந்த ஆய்வாளர்கள் சீரம் ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். இதை வழுக்கையான இடத்தில் போட்டால் 20 நாட்களில் முடி வளரும் எனப்படுகின்றது.
20 நாட்களில் முடி வளரும் சீரம்
இப்பொத இருக்கும் சமுதாயத்திற்கு சொட்டை விழவதும் வழுக்கை விழுவதும் சாதாரணம். அந்த இடங்களில் முடி வளர்வது சாத்தியமான விடயம்.
இப்படி நடக்கவே நடக்காது என நாம் நினைக்கும் விஷயத்தைக்கூட, அறிவியலால் சாத்தியப்படுத்த முடியும் என்பதற்கு சமீபத்திய உதாரணமாக அமைந்துள்ளது.

தற்போது இருக்கும் சமூகத்தினர்களுக்கு உள்ள பிரச்சனையாக இந்த முடி எதிர்தல் பிரச்சனை உள்ளது. அதுவும் 20 வயது வந்துவிட்டாலே வழுக்டகை சொட்டை விழுவது சாதாரணம்.
இதற்காக தற்போது கண்டுபிடித்துள்ள சீரம் உதவும். இந்த சீரத்தை வழுக்கைத்தலையில் சாதாரணமாக தடவினாலே, மூன்று வாரங்களுக்குள் (20 நாட்களுக்குள்) எவ்வித பக்கவிளைவுகளும் இல்லாமல் தலைமுடி துளிர்விட ஆரம்பித்து விடுவதாக கூறுகின்றனர்.
இந்த சீரத்தின் பெயர் Adipocyte lipolysis activates epithelial stem cells for hair regeneration through fatty acid metabolic signaling என்ற பெயரில், Cell Metabolism என்ற மருத்துவ இதழில் தைவான் தேசிய பல்கலைக்கழகம் சார்பில் இந்த சீரத்தின் ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளன.

இந்த சீரம் மனித உடலின் இயற்கையான கொழுப்பு அமிலங்களிலிருந்து தயாரிக்கப்படுகிறது எனப்படுகின்றது. இயற்கையான கொழுப்பு அமிலங்களுடன் பயோ காம்பவுண்ட் மூலம் தயாரிக்கப்பட்டுள்ளன.
இந்த சீரம் முடி இல்லாத இடத்தில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது.
தற்போது ஆய்வக எலிகள் மத்தியில் பரிசோதிக்கப்பட்டுள்ள இந்த சீரம், அடுத்தடுத்த கட்டங்களில் மனிதர்கள் மத்தியில் வெற்றி பெறும் பட்சத்தில், சந்தையில் மிகப்பெரிய மாற்றங்களை ஏற்படுத்தும் என நம்பப்படுகிறது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |