மறைந்த நடிகை சித்ராவின் தந்தை எடுத்த தவறான முடிவு: நடந்தது என்ன?
மறைந்த சின்னத்திரை நடிகை சித்ராவின் தந்தை காமராஜ், வீட்டில் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் மக்கள் மத்தியில் பரபரப்பாக உள்ளது.
தவறான முடிவு
பிரபல டிவி நிகழ்சியில் ஒளிபரப்பான ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை என்கிற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் விஜே சித்ரா. இவர் கடந்த 2020-ம் ஆண்டு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இது தொடர்பாக விசாரணை முடிந்து போலீசார் சித்ராவின் கணவர் ஹேம்நாத்தை கைது செய்தனர். இவர் சிறையில் 3 மாதங்கள் இருந்து பின்னர் ஜாமினில் வெளியே வந்தார்.
இதன் பின்னர் கடந்த ஆகஸ்ட் மாதம் இவர் விடுதலை செய்யப்பட்டார். இதனை எதிர்த்து த்ராவின் தந்தை காமராஜ் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார்.
இந்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், தற்போது சித்ராவின் தந்தை காமராஜ் தூக்கிட்டு தற்கொலை செய்திருக்கிறார் என தகவல் வெளியாகி உள்ளது.
தன் மகள் சித்ராவின் துப்பட்டாவிலேயே அவர் தூக்கு போட்டு தன் உயிரை மாய்த்துக் கொண்டிருக்கிறார். மகள் இறந்த நான்கு ஆண்டுகளில் தந்தையும் அதேபோல் மரணமடைந்திருப்பது அவரது குடும்பத்தாரை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |