மீண்டும் பாக்கியா வீட்டிற்குள் புகுந்த ராதிகா.. அலப்பறையால் கடுப்பான குடும்பத்தினர்
பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகா மீண்டும் கோபியுடன் பாக்கியா வீட்டிற்கு வந்துள்ளார்.
பாக்கியலட்சுமி
பிரபல டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியலில்களில் கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் இன்று வரை விறுவிறுப்பாக சென்றுக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. இந்த சீரியல் டிஆர்பியில் முன்னணி இடத்தில் இருந்து வருகிறது.
அதே சமயம் ஒவ்வொரு வாரமும் ஒரு பிரச்சனையை வைத்து ரசிகர்கள் மத்தியில் இந்த சீரியல் குறித்த எதிர்பார்ப்பை இயக்குனர் ஏற்படுத்தி வருகிறார்.
இவ்வளவு பிரச்சினைகளுக்கும் குடும்ப பெண்ணாக இருந்து பாக்கியா எப்படி தைரியமாக எதிர்கொள்கிறார் மற்றும் குடும்பத்திற்காக என்னென்ன விடயங்களை தியாகம் செய்கிறார் என்பதனை கருப்பொருளாக வைத்தே கதைக்களம் நகர்ந்து கொண்டிருக்கிறது.
ஆட்டம் காட்டும் ராதிகா
இப்படியொரு நிலையில், பாக்கியலட்சுமி சீரியலில் மீண்டும் கோபி ராதிகா மற்றும் மயூராவுடன் பாக்கியா வீட்டிற்குள் நுழைந்துள்ளார்.
கடந்த சில நாட்களாக கோபிக்கு சுகயீனம் காரணமாக ஈஸ்வரி அவரை அவருடன் வைத்து கொள்ள பிளான் போட்டு, அதன் படி செய்து கொண்டிருந்தார். இதனால் கடுப்பான ராதிகா தன்னுடைய வீட்டை காலி செய்து விட்டு கோபியுடன் மீண்டும் பாக்கியாவின் வீட்டிற்குள் வந்துள்ளார்.
கோபியும் ராதிகாவும் ஒரு அறையில் இருக்கையில், மயூ மற்றும் இனியாவுடன் பாக்கியா ஒரு அறையில் இருக்கிறார். ஒரு வீட்டில் தன்னுடைய இரண்டு மனைவிகளுடனும் கோபி இருந்து வருவதை ஈஸ்வரியால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.
மயூ பாக்கியா குடும்பத்தினருடன் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கும் பொழுது உள்ளே வந்த ராதிகா அவரை மாத்திரம் தனியாக சிரித்தப்படி அழைத்து செல்கிறார்.
இதனை எழில், கோபி, பாக்கியா மற்றும் ஜெனி அமர்ந்து கொண்டு பார்க்கிறார்கள். இந்த காணொளியை பாக்கியா அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |