பாரதி கண்ணம்மா வினுஷா தேவிக்கு திருமணம் முடிந்தது... வைரலாகும் வீடியோ!
சின்னத்திரை ரசிகர்களின் மனம் கவர்ந்த பிரபல சீரியல் நடிகை வினுஷா தேவிக்கு இன்று திருமணம் முடிந்துள்ளது. குறித்த காணொளி தற்போது இணையத்தில் வைரலாக வருவதுடன் லைக்குகளையும் வாழ்த்துக்களையும் குவித்து வருகின்றது.
சீரியல் நடிகை
வினுஷா விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா சீரியலில் நடித்து பிரபலம் ஆனவர் தான் வினுஷா தேவி. அந்த சீரியலில் முதலில் ரோஷினி ஹரிப்ரியன் தான் கண்ணம்மாவாக நடித்தார்.

ரோஷினியை சீரியல் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துவிட்டது. அவர் கண்ணம்மாவாக பட்டிதொட்டி எல்லாம் பிரபலமான நிலையில் அந்த சீரியலில் இருந்து திடீரென்று விலகிவிட்டார்.
இதையடுத்தே அந்த கதாபாத்திரத்தில் வினுஷா தேவியை நடிக்க வைத்தார்கள். ஆரம்பத்தில் எதற்கெடுத்தாலும் ரோஷினி ஹரிப்ரியனுடன் வினுஷாவை ஒப்பிட்டு பேசினார்கள் பாரதி கண்ணம்மா சீரியல் பார்த்தவர்கள்.
அதன் பிறகு ரோஷினியை மறந்து வினுஷாவை மட்டும் கண்ணம்மாவாக ஏற்றுக் கொண்டார்கள்.அந்த அளவுக்கு வினுஷா தேவி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.

பாரதி கண்ணம்மா சீரியலை அடுத்து பிக் பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசனில் கலந்து கொண்டு 28 நாட்கள் தாக்குப்பிடித்தார்.
தொடர்ந்து டிவி சீரியல்களில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார். அதன் பின் தற்போது விஜய் டிவியில் அவர் சுட்டும் விழி சுடரே என்ற சீரியலில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், வினுஷா தேவிக்கு அவரது காதலர் உடன் திருமணம் நடந்து முடிந்து இருக்கிறது. அவர் கடந்த சில வருடங்களாக லிங்கேஸ்வரன் என்பவரை காதலித்து வந்த நிலையில் தற்போது திருமணம் வெகுவிமர்சையாக நடந்து முடிந்ததை காாணளி வெளியிட்டு வினுஷா தேவி மகிழ்ச்சியாக அறிவித்துள்ளார்.குறித்த காணொளி இணையத்தில் வைராலாகியுள்ளதுடன் வாழ்த்துக்களையும் லைக்குகளையும் குவித்து வருகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |