இளையராஜா என் தாய்மாமா தான்... ஆனால் துன்புறுத்தல்கள் - நடிகை வேதனை
சின்னத்திரை நடிகை விலாசினி தனது குடும்ப வாழ்க்கை குறித்து பேசும்போது, தன் தாய்மாமா இளையராஜாவை குறிப்பிட்டு வருத்தம் தெரிவித்துள்ளார்.
சின்னத்திரை நடிகை
தவமாய் தவமிருந்து எனும் சின்னத்திரை தொடரில் நடித்து வருபவர் விலாசினி. சமீபத்தில் இவர் அளித்த நேர்காணல் ஒன்றில் இளையராஜாவை குறிப்பிட்டு பேசினார்.
விலாசினியின் அப்பாவின் அக்கா கணவர் தான் இளையராஜா. எனவே அவர் தனது தாய்மாமா என்று கூறும் விலாசினி, தனக்கு திரைத்துறை பின்புலம் இருந்தும் தனது கணவர் தன்னை அடித்து துன்புறுத்தியதாக வேதனை தெரிவித்தார்.
தற்போது விவாகரத்து பெற்று வாழ்ந்து வரும் விலாசினி, தனியாக தன் அம்மாவை கவனித்து வரும் நிலையில் உதவி செய்ய ஒருவரும் முன்வரவில்லை என குற்றம்சாட்டியுள்ளார்.
தொகுப்பாளினி
அத்துடன் திரையுலகில் நிறைய பாலியல் துன்புறுத்தல்கள் இருப்பதாகவும், அதனை கடந்து வந்திருப்பதாகவும் உருக்கத்துடன் கூறியுள்ளார்.
இவர் வெங்கட் பிரபு இயக்கிய பிரியாணி படத்தில் ஒரு பாடல் பாடலை பாடியுள்ளார், மேலும் RJ மற்றும் தொகுப்பாளினியாகவும் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |