மீனாட்சி பொன்னுங்க ! சீரியல் நடிகை முதன் முதலாக நடிக்கும் படம்... எந்த நடிகருடன் தெரியுமா?
சின்னத்திரை நடிகையான சௌந்தர்யா ரெட்டி, தற்போது மீனாட்சி பொண்ணுங்க என்ற சீரியலில் நடித்த இவர் தற்போது விஜய் தேவர் கொண்டாவுடன் திரைப்படத்தில் இணையவிருக்கிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
சௌந்தர்யா ரெட்டி
தெலுங்குத் தொடரில் நடித்தன் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் தான் சௌந்தர்யா ரெட்டி. இவர் ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் மீனாட்சி பொண்ணுங்க என்ற சீரியலில் நடித்து வருகிறார்.
இந்த சீரியல் மூலம் சௌந்தர்யா ரெட்டி மக்கள் மத்தியில் அதிகம் பேசப்ட்பட்டார். இந்த நிலையில், தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் தேவரகொண்டாவுடன் அவர் எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்றை இணையதளத்தில் பகிர்ந்துள்ளார்.
இது தற்போது இணையத்தில் வரலாகி வருகின்றது. அத்துடன் தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டாவுடன் புதிய படத்தில் நடிக்க உள்ளாரா என்று ரசிகர்கள் மத்தியில் கேள்விகளையும் எழுப்பி வருகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |