சீரியல் நடிகை வைஷாலிக்கு குழந்தை பிறந்தது! நேரில் சென்று வாழ்த்திய நாஞ்சில் விஜயன்
சீரியல் நடிகை வைஷாலி தனிகா தனக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக தனது இன்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு இணையத்தில் வாழ்த்துக்களை குவித்து வருகின்றது.
வைஷாலி
லட்சுமி வந்தாச்சு, ராஜா ராணி, முத்தழகு உள்ளிட்ட தொடர்களில் நடித்து தமிழ் சின்னத்திரை ரசிகர்களிடம் பிரபலமானவர் தான் வைஷாலி தனிகா.
இவர் சீரியலில் நடிப்பதற்கு முன்பே திரைப்படங்களில் அறிமுகமானார். இவர் 'காதல் கசகுதய்யா', 'கடுகு', 'சர்கார்', 'பைரவா', 'ரெமோ', 'சீமராஜா' உள்ளிட்ட படங்களில் சிறு வேடங்களில் நடித்து வெள்ளி திரையிலும் பரீட்சையமான நடிகையாக வலம்வந்தவர்.
இறுதியாக விஜய் தொலைக்காட்சியில், ஒளிபரப்பான மகாநதி சீரியலில் வெண்ணிலாவாக நடித்து வந்தார். இதையடுத்து 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியலிலும் ஐஸ்வர்யா கேரக்டரில் நடித்தபோது, அந்த சீரியலில் இருந்து அவர் நீக்கப்பட்டார்.
இவர் நடிப்பை தாண்டி சமூக ஊடகங்களிலும் மிகவும் ஆர்வம் காட்டுவது வழக்கம். தனது நீண்டநாள் காதலர் சத்யதேவை பெற்றோர்கள் சம்மதத்துடன் கடந்த 2001 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.
கடந்த சில மாதங்களுக்கு முன் இந்த தம்பதியினர் கர்ப்பமாக இருக்கும் செய்தியை சமூக ஊடகங்களில் அறிவித்தார்கள் என்பது குறிப்பி்டத்தக்கது.
இந்நிலையில், நாஞ்சில் விஜயன் தனது இன்ஸ்டாவில் "மருமகன் பொறந்துட்டான்" என தெரிவித்து புகைப்படத்துடன் வெளியிட்டுள்ள பதிவு தற்போது இணையத்தில் லைக்குகளையும், வாழ்த்துக்களையும் குவித்து வருகின்றது.
இவர்களது குழந்தையை நாஞ்சில் விஜயன் தனது மனைவி மரியா, குழந்தையுடன் நேரில் சென்று வாழ்த்தியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
