சிம்புவின் திருமணத்திற்காக காத்திருக்கும் பிரபல நடிகை! வெளியிட்ட இன்ஸ்டா பதிவால் குழப்பம்
பிரபல ரிவி சீரியலில் நடித்த பிரபல நடிகை சிம்பு திருமணத்திற்கு பின்னே தனது திருமணம் என்று பதிவிட்டுள்ள பதிவு வைரலாகி வருகின்றது.
நடிகர் சிம்பு
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம்வரும் நடிகர் சிம்பு, நடிப்பு மட்டுமின்றி இயக்குனர், பாடகர், நடனம் என்று பன்முகத்திறமை கொண்டு திகழ்கின்றார்.
இவர் தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பல்வேறு படங்களில் நடித்துள்ளார். இவரது படங்கள் அடுத்தடுத்து தோல்வியடைந்த நிலையில், உடல் எடை அதிகரித்து கடும் விமர்சனத்திற்கு ஆளானார்.
பின்பு பயங்கரமாக உடல் எடையைக் குறைத்து மாநாடு படம் மூலம் கம் பேக் கொடுத்தார். கமல் நடிக்கும் தக் லைவ் படத்தில் சிம்புவும் நடித்து வருகின்றார்.
தற்போது 41 வயதாகும் சிம்பு இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருந்து வருகின்றார்.இவரது திருமணம் குறித்து நாளுக்கு நாள் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இந்நிலையில் பிரபல சீரியல் நடிகையும், சிம்புவின் தீவிர ரசிகையுமான ரேமா அசோக், சிம்புவின் திருமணத்திற்கு பிறகு தான் தனக்குத் திருமணம் என்று தடாலடியாக கூறியுள்ளார்.
ரேமா எதற்காக இவ்வாறு கூறியுள்ளார் என்பதுதெரியாமல் ரசிகர்கள் குழப்பத்தில் ஆழ்ந்து வருகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |