சீரியலில் அம்மாவாக நடிக்கும் நடிகையா இது? இளம் நடிகைகளை பொறாமை கொள்ள வைக்கும் புகைப்படங்கள்
சீரியலில் அம்மா கதாபாத்திரத்தில் நடித்துவரும் நடிகை பிரவீனாவின் புகைப்படம் வைரலாகி வருகின்றது.
நடிகை பிரவீனா
பிரபல ரிவியில் ஒளிபரப்பான பிரியமானவள் சீரியல் மூலம் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தவர் தான் நடிகை பிரவீனா. இந்த சீரியலில் 4 மகன்களுக்கு தாயாக நடித்து வருகின்றார்.
தற்போது மாமியார் கதாபாத்திரத்தில் ராஜா ராணி சீரியல் 2ல் நடித்து வருகின்றார். மாமியார், அம்மா கதாபாத்திரத்தில் புடவையில் காணப்படுகின்றார்.
ஆனால் இவரது சமூகவலைத்தளங்களில் சுடிதார் மற்றும் மாடர்ன் உடையணிந்து புகைப்படம் வெளியிட்டுள்ளார்.
நடிகை பிரவீனா இவருடைய மகளையும் விரைவில் திரைத்துறையில் அறிமுகப்படுத்தயிருக்கிறார். தற்போது இவரது புகைப்படங்கள் ரசிகர்களால் அதிகமாக பார்க்கப்பட்டு வருகின்றது.