போடா போடி பட சிம்பு ஸ்டைலில் கர்ப்பத்தை அறிவித்த தம்பதி- எங்கு இருக்காங்க பாருங்க
சின்னத்திரை நடிகை கண்மணி கர்ப்பத்தை உறுதிச் செய்த காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
கண்மணி மனோகரன்
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய பாரதி கண்ணம்மா, அமுதாவும் அன்னலக்ஷ்மியும் போன்ற தொடர்களில் நடித்து பிரபலமானவர் தான் கண்மணி மனோகரன்.
இவர், சன் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருக்கும் அஸ்வத் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
கடந்த 2024 செப்டம்பர் மாதத்தில் நடைபெற்ற திருமணத்தில் சின்னத்திரை பிரபலங்களில் பலர் கலந்து கொண்டனர்.
கர்ப்பம்
இந்த நிலையில் சமூக வலைத்தளங்களில் திருமணத்திற்கு பின்னரும் ஆக்டிவாக இருந்த கண்மணி மனோகரன் அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை பகிர்வார்.
அந்த வகையில், கர்ப்பமாக இருப்பதாக கணவருடன் எடுத்து கொண்ட புகைப்படங்களுடன் பகிர்ந்துள்ளார்.
புகைப்படங்களை பார்த்த இணையவாசிகள், தம்பதிகளுக்கு வாழ்த்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
