பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை கண்மணிக்கு குழந்தை பிறந்தது... புகைப்படத்துடன் அவரே வெளியிட்ட பதிவு
பிரபல சீரியல் நடிகை கண்மணி மற்றும் தொகுப்பாளர் அஷ்வத் தம்பதியினருக்கு குழந்தை பிறந்துள்ளது. இந்த மகிழ்ச்சியான விடயத்தை கண்மணி புகைப்படத்துடன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
சீரியல் நடிகை கண்மணி
விஜய் தொலைக்காட்சியில் மிகவும் ஹிட் தொடராக ஒளிபரப்பானது பாரதி கண்ணம்மா தொடரில் அஞ்சலி கதாபாத்திரத்தில் நடித்ததத்து ரசிகர்களின் பேராதரவை பெற்றவர் தான் நடிகை கண்மணி.
அந்தத் தொடரில் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, ஜீ தமிழ் தொலைக்காட்சியில் 'அமுதாவும் அன்னலட்சுமியும்' தொடரில் நடித்திருந்தார்.
இந்தத் தொடரும் மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனிடையே சன் தொலைக்காட்சியின் வணக்கம் தமிழா, உள்ளிட்ட சிறப்பு நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கிய அஷ்வத்தை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
இந்நிலையில் கண்மணி- அஷ்வத் தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்திருக்கிறது. இதனை இருவரும் தங்களுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்திருக்கின்றனர். குறித்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருவதுடன் ரசிகள்கள் இந்த தம்பதியினருக்கு வாழ்த்துக்களையும் குவித்து வருகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |