விபத்தில் பிரபல சீரியல் நடிகை பலி! அதிர்ச்சியில் ரசிகர்கள்
மராத்தி மொழி சீரியல் நடிகை கல்யாணி பைக்கில் சென்று கொண்டிருந்த போது ட்ராக்டர் மோதி உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சீரியல் நடிகை
மராத்தி மொழி சீரியல்களில் நடித்து பிரபலமானவர் நடிகை கல்யாணி குராலே ஜாதவ்(32). திருமணமாகாத இவர் கோல்ஹாபூர் மாவட்டத்தில் ஹலோண்டி என்கிற கிராமத்தில் ஹோட்டல் ஒன்றினை நடத்தி வந்துள்ளார்.
ஹொட்டலுக்கு எப்போதும் பைக்கில் சென்றுவருவதை வழக்கமாக வைத்துள்ள கல்யாணி, கடந்த சனிக்கிழமை இரவு 11 மணியளவில் ஹொட்டலை மூடிவிட்டு தனது இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார்.
அப்போது எதிர்பாராத விதமாக எதிரே வந்த ட்ராக்டர் மீது கல்யாணி சென்ற இருசக்கர வாகனம் மோதியதில், நடிகை தூக்கி எறியப்பட்டார்.
விபத்தில் படுகாயமடைந்த கல்யாணியை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
விபத்தை ஏற்படுத்திய ட்ராக்டர் சாரதி மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
குறித்த நடிகையின் மறைவுக்கு ரசிகர்களும், பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.