10 வருடங்கள் காத்திருப்பு... இரட்டைக் குழந்தையை பெற்றெடுத்த பிரபல நடிகை
பிரபல சீரியல் நடிகை ஜுலி பல வருட காத்திருப்பிற்கு பின்பு இரட்டைக் குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார்.
நடிகை ஜுலி
பிரபல ரிவியில் ஏராளமான சீரியல்களில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை ஜுலி. இவர் துணை இயக்குனர் மணிகண்டன் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகியும் இவருக்கு குழந்தை இல்லாமல் இருந்தது. மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை எடுத்த போதிலும் இரண்டு முறை அபார்ஷன் ஏற்பட்டுள்ளது.
பின்பு சில மாதங்களுக்கு முன்பு கர்ப்பமாக இருப்பதாக அறிவித்த இவர், வெளிநிகழ்ச்சியில் எதிலும் கலந்து கொள்ளாமல் இருந்து வருகின்றார்.
Siragadikka Aasai: மனோஜிற்கு வந்த மொட்டை கடிதம்! மிரட்டும் மர்ம நபர் யார்? மீண்டும் வெடிக்கும் பூகம்பம்
கடந்த சில வாரங்களுக்கு முன்பு தான் ஜூலி தன்னுடைய வளைகாப்பு புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்த நிலையில், தற்போது இவருக்கு ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் என இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதைத் தொடர்ந்து ரசிகர்கள் ஜூலி மற்றும் அவரின் கணவருக்கு தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |