சின்ன மருமகள் சீரியல் ஹீரோவுடன் இணையும் சிறகடிக்க ஆசை கோமதி ப்ரியா!
சிறகடிக்க ஆசை சீரியல் புகழ் ஹீரோயின் கோமதி பிரியாவின் அடுத்த Project குறித்த தகவல் வெளியாகி தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
கோமதி பிரியா
சிறகடிக்க ஆசை சீரியலில் மீனா ரோலில் நடித்து ஒட்டுமொத்த ரசிகர்களின் மனங்களையும் கவர்ந்தவர் தான் நடிகை கோமதி பிரியா.
செம்பனீர் பூவே என்ற பெயரில் மலையாளத்தில் ஒளிபரப்பாக இந்த சீரியலிலும் நடிகை கோமதி பிரியா தான் நாயகியாக நடித்து வந்தார்.
தமிழ் மற்றும் மலையாளம் இரண்டிலும் ஏகப்பட்ட ரசிகர் பட்டாளத்தை கொண்ட இவர் அண்மையில் மலையாள சீரியலிலிருந்து விலகியிருந்தார்.
இந்நிலையில் அவரின் புதிய புராஜக்ட் குறித்த ஒரு தகவல் வெளியாகி இணையத்தில் கவனம் ஈர்த்து வருகின்றது.
அதாவது, அடியே சிறுக்கி மகளே... என்கிற ஆல்பம் பாடலின் கோமதி பிரியா நடித்துள்ளார். இதில் இவருக்கு ஜோடியாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சின்ன மருமகள் சீரியலில் ஹீரோவாக நடித்து வரும் நவீன் நடித்துள்ளார்.
கிராமத்து பாணியில் உருவாகியுள்ள இந்த பாடல் விரைவில் வெளிவரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |