பிரபல நடிகை சாப்பிட்ட தோசையில் தங்க மூக்குத்தி: தீயாய் பரவும் புகைப்படம்
ரிவி நடிகை ஒருவர் சாப்பிட்ட தோசையில் தங்க மூக்குத்தி இருந்தது ஆச்சரியத்தினை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவில் கொச்சி காக்கநாடு பகுதியை சேர்ந்தவர் சூரிய தாரா. ஏராளமான மலையாள தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு படப்பிடிப்பு முடிந்து வீட்டுக்கு வரும் வழியில், எரூர் பகுதியில் ஒரு கடையில் நடிகை சூரிய தாரா தோசை மாவு வாங்கி வந்துள்ளார்.
வீட்டுக்கு வந்ததும் அதனை அவரது தாயார் தோசையாக சுட்டுத்தர குடும்பத்தினர் அனைவரும் சாப்பிட்டனர். அப்போது சூரிய தாராவின் சாப்பிட்ட தோசையில் தங்க மூக்குத்தி கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.
இதுகுறித்து தனது முகநூல் பக்கத்தில் சூரிய தாரா கூறியிருப்பதாவது, இந்த தோசையை குழந்தைகள் சாப்பிட்டிருந்தால் உடல் நலனுக்கு பிரச்சினை ஏற்பட்டிருக்கும்.
தோசை மாவை பேக் செய்யும் போது எதிர்பாராத விதமாக மூக்குத்தி மாவில் விழுந்திருக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.