புயலிலும் சீரியல் நடிகை கேப்ரில்லா சார்ல்டன் என்ன பண்ணிருக்காங்கன்னு பாருங்க... வைரலாகும் காணொளி
பிரபல சீரியல் நடிகை கேப்ரில்லா புயல் வீசிய நேரத்திலும் கடலுக்கு சென்று வெளியிட்டுள்ள காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
நடிகை கேப்ரில்லா
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நடன நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி வெள்ளித்திரையிலும் கால்பதித்தவர் தான் கேப்ரில்லா சார்ல்டன்.
இவர் 2012 -ம் ஆண்டு தனுஷ் நடிப்பில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் வெளியான '3' படத்தில் ஸ்ருதி ஹாசனுக்கு தங்கையாக தமிழ் சினிமாவில் கால்பதித்தார்.
அதனை தொடர்ந்து சமுத்திரக்கனி இயக்கி நடித்த 'அப்பா' படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார்.
சிறுவயதில் இருந்தே நடனத்தில் ஆர்வம் கொண்ட இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஜோடி என்ற நடன நிகழ்ச்சியில் கலந்துகொண்டார், அதில் டைட்டிலையும் கைப்பற்றினார்.
அதனை தொடர்ந்து பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டு ரூ. 5 லட்ச பணத்துடன் வெளியேறினார்.இது அவருக்கு மேலும் வாய்ப்புகளை குவித்தது.
பிக்பாஸின் பின்னர் ஈரமான ரோஜாவே சீரியலின் இரண்டாம் பாகத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தார்.
தற்போது சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் கேப்ரில்லா மருமகள் எனும் சீரியலில் கதாநாயகியாக நடித்து வருகின்றார்.
தற்போது நாட்டில் பல பகுதிகளிலும் புயலின் தாக்கத்தால் கனமழை மற்றும் காற்று அதிகமாக இருக்கின்றது.
இந்நிலையில் கடலுக்கு சென்று கேப்ரில்லா வெளியிட்டுள்ள காணொளி இணையத்தில் அசுர வேகத்தில் பகிரப்பட்டு வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |