ட்ரெண்டிங் பாடலுக்கு சேலைவுடன் குத்தாட்டம் போட்ட திவ்யா.. அனல் பறக்க வெளியான காட்சி
ட்ரெண்டிங் பாடலுக்கு சீரியல் நடிகை திவ்யா போட்ட குத்தாட்டம் காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
காதல் திருமணம்
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய “கேளடி கண்மணி'” என்ற சீரியல் மூலம் பிரபலமானவர் தான் நடிகர் திவ்யா ஸ்ரீதர்.
இவர் செல்லம்மா சீரியல் மூலம் பிரபலமாக இருக்கும் நடிகர் அர்ணவுடன் பல ஆண்டுகளாக லிவிங் டூ கெதரில் இருந்து வந்தார்.
பின்னர் அதிரடியாக ஒரு நாள் திருமணம் செய்து கொண்டதாக புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தனர்.
திருமணம் செய்து கொண்டு கொஞ்ச நாட்களில் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பிரச்சினை வெடித்தது.
இதனை தொடர்ந்து திவ்யா - அர்ணவ் பிரச்சினை சமூக வலைத்தளங்களில் பேசும் பொருளாக மாறியிருந்தது.
அனல் பறக்க வெளியான காட்சி
தற்போது இருவரும் பிரிந்து தங்களின் வேலைகளை பார்த்து வருகிறார். திவ்யாவிற்கு அழகிய பெண் குழந்தையொன்று சில மாதங்களுக்கு முன் பிறந்தது.
இந்த குழந்தை பிறந்த கொஞ்ச நாளிலேயே திவ்யா சீரியல் ஷூட்டிங்கிற்கு செல்ல ஆரம்பித்து விட்டார். சீரியலில் எவ்வளவு பிஸியாக இருந்தாலும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.
அந்த வகையில் அவ்வப்போது தனது குழந்தையுடன் இருக்கும் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை பகிர்வார்.
இதன்படி, தற்போது தனது சீரியல் நண்பர்களுடன் இணைந்து ட்ரெண்டிங் பாடலுக்கு நடனமாடிய காட்சியொன்றை பகிர்ந்துள்ளார்.
இந்த காணொளி இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளதுடன் நேற்றைய தினம் அவரின் 30 ஆவது பிறந்த நாளை கொண்டாடியுள்ளார். இதற்கான வாழ்த்துக்களையும் ரசிகர்கள் பகிர்ந்து வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |