குழந்தைகளுக்கே டஃப் கொடுக்குறாங்களே...! ஆல்யா மானசாவின் ட்ரெண்டிங் ரீல்ஸ் வைரல்
சீரியல் நடிகை ஆல்யா மானசா குழந்தை குரலில் ட்ரெண்டிங்கில் உள்ள ரீல்ஸூக்கு நிஜமாகவே குழந்தைபோல் செம கியூட்டாக பாசாங்கு செய்து தற்போது வெளியிட்டுள்ள காணொளி இணையத்தில் படுவைரலாகி வருவதுடன் லைக்குகளையும் குவித்து வருகின்றது.
ஆல்யா மானசா
தமிழ் சின்னத்திரையில் ரசிகர்களின் மனதை வென்ற முன்னணி நடிகைகளில் ஒருவர் ஆல்யா மானசா. நடன நிகழ்ச்சியான மானாட மயிலாட மூலம் மீடியா உலகில் அறிமுகமான அவர், தனது திறமையால் ரசிகர்களின் கவனத்தை விரைவில் ஈர்த்தார்.

அதன்பின் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியலில் நாயகியாக நடித்ததன் மூலம் பெரும் பிரபலமானார். அந்த தொடரில் தன்னுடன் இணைந்து நடித்த சஞ்சீவை காதலித்து பின்னர் திருமணம் செய்து கொண்டார்.

ரசிகர்களின் விருப்ப ஜோடியாக திகழும் இந்த தம்பதியினருக்கு தற்போது இரண்டு அழகான குழந்தைகள் உள்ளனர். தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் பாரிஜாதம் தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துவரும் ஆல்யா மானசாவின் நடிப்புக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

சீரியல்களைத் தாண்டி விளம்பரங்கள், தனியார் நிகழ்ச்சிகள், நடன நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு மேடைகளிலும் ஆல்யா மானசா தனது திறமையை வெளிப்படுத்தி வருகிறார்.
இந்த நிலையில், குழந்தை குரலில் ட்ரெண்டிங்கில் உள்ள ரீல்ஸூக்கு நிஜமாகவே குழந்தைபோல் செம கியூட்டாக பாசாங்கு செய்து தற்போது வெளியிட்டுள்ள காணொளி இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது.

இணையத்தில் நெட்டிசன்கள் பலரும் அந்த வீடியோவை பகிர்ந்து, அவரது குழந்தை தனமான நடத்தை உண்மையில் குழந்தைகளுக்னே டஃப் கொடுக்கும் வகையில் இருப்பதாக பாரட்டுகளையும் குவித்து வருகின்றனர்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |