ஆல்யா- சஞ்சீவ் ஜோடியின் கனவு வீடு எப்படி இருக்கு?
பிரம்மாண்டமாக கட்டப்பட்டு வரும் ஆல்யா- சஞ்சீவ் ஜோடியின் கனவு வீட்டின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
ஆல்யா- சஞ்சீவ்
சின்னத்திரையில் பிரபலமாக இருக்கும் ஜோடிகள் தான் சஞ்சீவ்– ஆல்யா மானசா.
இவர்கள் ராஜா ராணி சீரியலில் ஜோடியாக நடிக்கும் பொழுது காதல் ஏற்பட்டு பின்னர் திருமணம் செய்து கொண்டனர்.
தற்போது இருவரும் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் இனியா, கயல் இரண்டு சீரியல்களிலும் தனித்தனியாக நடித்து வருகிறார்கள், இவர்களுக்கு அழகான இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள்.
சீரியலில் எவ்வளவு பிஸியாக இருந்தாலும் தனியாக யூடியூப் சேனலொன்று வைத்து நடத்தி வருகிறார்கள். இவர்களின் காணொளிகளை பார்ப்பதற்காகவே தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது.
கனவு வீடு
இந்நிலையில் இருவரும் கொஞ்சம் கொஞ்சமாக பணம் சேர்த்து பிரம்மாண்டமாக வீடு கட்டி வருகிறார்கள்.
தற்போது இந்த வீடு ஓரளவு கட்டி முடிக்கப்பட்ட நிலையில் கட்டுமானப்பணியின் போது எடுக்கப்பட்ட காணொளிகள் மற்றும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
ஆல்யாவின் கனவு வீடு என கூறும் போது அதனை பார்ப்பதற்கு அவரின் ரசிகர்களும் மிகுந்த ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |