தீ விபத்தில் சிக்கிய சீரியல் நடிகர்! உண்மையில் தப்பித்தது எப்படி? பயத்துடன் விளக்கம்;
சென்னையில் உள்ள தியாகராயநகர் பாண்டிபஜார் சாலையில் உள்ள வணிகவளாகத்தில் கடந்த நாளில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. மூன்று தளங்களைக் கொண்ட இந்த வணிக வளாகத்தில் ஜவுளி மற்றும் பைனான்ஸ் நிறுவன அலுவலகத்தில் திடீர் தீ பற்றியதால் அங்குள்ள பொருட்கள் சேதமடைந்துள்ளன.
இதுகுறித்து தகவலறிந்து உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசார், கட்டிடத்தின் உள்ளே சிக்கியிருந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தின் போது சின்னத்திரை நடிகரான ஸ்ரீ மற்றும் அவருடைய அம்மாவும் சிக்கியுள்ளனர்.
இதுகுறித்து பேட்டியளித்த நடிகர் ஸ்ரீ, உயிரை காப்பாற்றிய காவல்துறை மற்றும் தீயணைப்புதுறையினருக்கும், மக்களுக்கும் கடவுளுக்கும் எனது மனமார்ந்த நன்றி. கிட்டதட்ட 70 பேர் உள்ளோ மாடிக்கிட்டோம்.
இதில் வயதானவர்கள் இருந்தார்கள். தீ ஏற்பட்ட இடத்தால் அங்கிருந்தவர்கள் யாராலும் மூச்சு விட முடியாமல் போனது. இதில் ஒரு நல்ல விஷயம் என்னவென்றால் அங்கிருந்த மொட்டை மாடி திறந்து இருந்தது. உடனே அங்கு சென்றுவிட்டோம். அங்கும் கருப்பு சூழ்ந்த புகை வந்தது.
பிறகு வெளியே இருந்து மக்களெல்லாம் கற்களை தூக்கி எரிந்து கண்ணாடியை உடைத்த படி இருந்திருக்கின்றனர். முதலில் இவர்களுக்கு எதற்காக கற்களை தூக்கி எறிகிறார்கள் என்று தெரியாமல் இருந்தாலும் பின்பு அவர்கள் கண்ணாடியை உடைத்த பிறகு தான் தீ வெளியே தெரிய ஆரம்பித்திருக்கிறது.
அப்போது வெளியே இருந்த மக்கள் இவர்களுக்கு ஆதரவு கொடுத்துக் கொண்டிருந்தார்கள். அதன்பின்னர், மக்கள் தீயணைப்பு துறையினர்கள் அனைவரும் வந்து காப்பாற்றி விட்டார்கள்.
பாதுகாப்பாக இருப்பது எவ்வளவு முக்கியம் என்பது இதுபோன்ற சம்பவம் நடக்கும் போது தான் தெரிகிறது என பதற்றத்துடன் நடந்ததை விளக்கினார்.