மாமியாரை மனைவியாக்கிய நடிகர்... வியக்க வைக்கும் காதல் கதை!
பொதுவாக உண்மையான காதலுக்கு தோற்றம், நிறம், வயது, அந்தஸ்து, மொழி, இனம், மதம் என எதுவும் முக்கியம் கிடையாது என பலரும் சொல்லுவார்கள்.ஆனால் நடைமுறையில் பலரும் இதை பின்பற்றுவது கிடையாது.
ஆனால் அனைத்து வேறுபாடுகளையும் தகர்த்தெறிந்து ஒரு ஜோடி சீரியலில் சேர்ந்து நடித்த போது காதல் வயப்பட்டு திருமணம் கொண்டார்கள்.
இதில் என்ன வியப்பு, சீரியலில் சேர்ந்து நடிப்பவர்கள் காதலித்து திருமணம் செய்து கொள்வது சாதாரன விடயம் தானே என நீங்கள் நினைக்கலாம்.
ஆனால் இந்த காதல் கதை சற்று வித்தியாசமானது. சீரியலில் தனக்கு மாமியாராக நடித்த நடிகையை அதே சீரியலில் மருமகனாக நடித்த நடிகர் காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார்.
அண்மையில் இவர்கள் தங்களின் 20வது திருமண நாளை கொண்டாடியுள்ளனர். இவர்களின் திருமணத்திற்கு பல எதிர்ப்புகள் வந்த போதும் அதைப்பற்றி கவலைப்படாமல் இருவரும் திருமணம் செய்து கொண்டுள்ளார்கள்.
இந்திரனில் - மேக்னா ராமி
அப்படி திருமணம் செய்துக்கொண்டவர்கள் தான் இந்திரனில் - மேக்னா தம்பதியினர்.
தெலுங்கில் மிகவும் பிரபலமான "சக்ரவாகம்" என்ற சீரியல் 2003-ல் ஒளிபரப்பானது. இதில் தனது கணவர் இந்திரனிலுக்கு மாமியாராக மேக்னா ராமி நடித்திருந்தார்.
1000 எபிசோடுகளை கடந்து ஓடிய இந்த சீரியலின் டிஆர்பி எப்போதுமே டாப்பில் தான் இருந்ததுள்ளது.
குறித்த சீரியலில் மாமியார் மருமகனாக நடித்த இந்திரனீலும், மேகனாவும் நிஜ வாழ்க்கையில் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். இவர்களுக்கு திருமணம் ஆகி 20 வருடம் ஆன போதிலும், இதுவரை இந்த தம்பதியினருக்கு குழந்தை இல்லை என இவர்கள் வருத்தம் தெரித்துள்ளனர்.
என்றாலும், 40 வயதை எட்டிய இந்த தம்பதியினருக்கு, "இப்போது குழந்தை பிறந்தாலும், அவர்களை வளர்க்கும்போது 60 வயதாகும்.அந்த சமயத்தில் குழந்தைகளை பார்த்துக்கொள்ள யார் இருப்பார்கள் என்ற பயம் இருக்கின்றது அதனால் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பவில்லை” என இவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |