செப்டம்பர் மாதம் பிறந்தவர்களின் குணம் எப்படி இருக்கும்? முழுவிபரம் இதோ
ஜோதிட சாஸ்திரத்தின் படி, எப்படி ஒரு ராசியைக் கொண்டு ஒருவரின் குணாதிசயத்தைக் கூற முடியுமோ, அதேப் போல் ஒரு மாதத்தைக் கொண்டும் குணாதிசயம் மற்றும் வாழ்க்கை பற்றி அறிய முடியும்.
தற்போது ஒன்பதாவது மாதமான செப்டம்பர் மாதத்தில் நுழைந்திருக்கிறோம். நியூமராலஜியின் படி, செப்டம்பர் மாதம் செவ்வாய் பகவான்/கிரகமாக கருதப்படுகிறது. நவகிரகங்களில் செவ்வாய் தைரியம் மற்றும் வலிமையின் காரணியாக கருதப்படுகிறது.
எனவே செப்டம்பர் மாதத்தில் பிறந்தவர்களுக்கு செவ்வாயின் தாக்கம் இருக்கும். இம்மாதத்தில் பிறந்தவர்களின் குணங்களை தற்போது தெரிந்து கொள்ளலாம்.
திறந்த மனதுடையவர்கள்
செப்டம்பர் மாதத்தில் பிறந்தவர்கள் எதையும் எளிதில் புரிந்து கொள்ளக்கூடியவர்கள் மற்றும் அதிக சகிப்புத்தன்மை கொண்டவர்கள். இவர்கள் மற்றவர்களின் கருத்துக்கள், விருப்பங்கள் மற்றும் நம்பிக்கைகளை மதிப்பவர்கள்.
வாழ்வில் நேர்மறையான மாற்றங்களை ஏற்றுக் கொள்வார்கள். மனதில் பட்டதை சற்றும் தயங்காமல் வெளிப்படையாக கூறுவார்கள்.
உண்மையாக இருப்பார்கள்
இந்த மாதத்தில் பிறந்தவர்கள் உண்மையாக இருப்பார்கள். மிகவும் விசுவாசமானவர்கள். பொய் கூறுபவர்களை ஆதரிக்கமாட்டார்கள். உண்மையின் பக்கம் நின்று அதிகம் வாதிடுவார்கள். வாழ்க்கையை நன்கு புரிந்து வாழக்கூடியவர்கள்.
கடின உழைப்பாளி
செப்டம்பர் மாதத்தில் பிறந்தவர்கள் கடின உழைப்பாளிகள். இவர்கள் தங்களின் கடின உழைப்பால் தங்கள் வாழ்க்கையில் நிறைய சாதிப்பார்கள். மேலும் இம்மாதத்தில் பிறந்தவர்கள் ஒரு பிரச்சனைக்கு மிகவும் வேகமாக தீர்வு காண முயல்வார்கள்.
மிகவும் கண்ணியமானவர்கள்
செப்டம்பரில் பிறந்தவர்கள் மிகவும் கண்ணியமானவர்கள். மற்றவர்களின் உணர்வுகளை புண்படாமல் பார்த்துக் கொள்வார்கள். எப்போதும் தாழ்மையான நபராக இருக்க முயற்சிப்பார்கள். மேலும் இவர்கள் தங்களின் கண்ணியமான மற்றும் அடக்கமான குணங்களால் மற்றவர்களை எளிதில் ஈர்ப்பார்கள்.
தூய்மையான இதயம்
செப்டம்பர் மாதத்தில் பிறந்தவர்கள் மென்மையான மற்றும் தூய்மையான இதயம் கொண்டவர்கள். இவர்கள் அதிகம் உணர்ச்சிவசப்படுவார்கள். அன்பானவர்கள், மற்றவர்களுடன் நன்கு பழகக்கூடியவர்கள். இந்த மாதத்தில் பிறந்தவர்கள் மற்றவர்கள் முன் தங்களை வலிமையாக காட்ட அதிக முயற்சிப்பார்கள்.
சிறந்த வாழ்க்கைத் துணை
செப்டம்பரில் பிறந்தவர்கள் தங்கள் உறவுகளில் சிறந்து விளங்குவார்கள். தங்கள் வாழ்க்கைத் துணையை எப்போதும் பாராட்டுவார்கள்.
ஒவ்வொரு கடினமான சூழ்நிலையிலும் எப்போதும் தங்கள் வாழ்க்கைத் துணையுடன் இருப்பார்கள். இவர்களைப் பொறுத்தவரை, ஒருவரின் ஈகோவை திருப்திப்படுத்துவதை விட ஆரோக்கியமான உறவைக் கொண்டிருப்பது மிகவும் முக்கியமானது.
திருமண வாழ்க்கை சந்தோஷம் நிறைந்து இருக்கும். மேலும் இவர்கள் வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவையும் பெறுவார்கள். சில நேரங்களில் இவர்களின் பழக்கவழக்கங்கள் திருமண வாழ்க்கையில் ஏற்றத்தாழ்வுகளை ஏற்படுத்தலாம்.
சிறந்த தொழில் எது?
செப்டம்பரில் பிறந்தவர்கள் ஒவ்வொரு வேலையையும் சிறந்த முறையில் செய்து முடிக்க முயற்சிப்பார்கள். ஜோதிடத்தைப் பொறுத்தவரை, செப்டம்பரில் பிறந்தவர்கள் தங்கள் வாழ்க்கையில் விரைவில் வெற்றி காண்பார்கள்.
செப்டம்பர் மாதத்தில் பிறந்தவர்கள் விஞ்ஞானிகள், ஆசிரியர்கள், நல்ல ஆலோசகர்கள் மற்றும் அரசியல்வாதியாக நிறைய வாய்ப்புள்ளது.
குறைபாடுகள் என்ன?
செப்டம்பர் மாதம் செவ்வாயைக் குறிக்கிறது. எனவே செவ்வாயின் தாக்கம் இந்த மாதத்தில் பிறந்தவர்களின் மீது அதிகம் இருப்பதால், இவர்கள் மிகவும் வேகமாக கோபப்படுவார்கள்.
தங்களுக்கு வரும் கோபத்தை சற்றும் மறைக்காமல் உடனடியாக வெளிப்படுத்துவார்கள். இவர்களால் உறவில் எந்த ஒரு மாற்றத்தையும் தாங்கிக் கொள்ளமாட்டார்கள்.
மேலும் தங்களுக்கும் வாழ்க்கைத் துணைக்கும் இடையே மூன்றாம் நபர் குறுக்கிடுவதை இவர்கள் விரும்பமாட்டார்கள்.