நகை பிரியர்களுக்கு குட் நியூஸ்: தங்க விலை திடீர் வீழ்ச்சி!
தங்கம் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. குறிப்பாக, ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து வந்த நிலையில், மாதத்தின் இறுதியில் தொடர்ந்து சரிவை சந்தித்தது.
இதன் தொடர்ச்சியாக செப்டம்பர் மாதத்திலும் தங்கம் விலையில் தொடர்ந்து ஏற்ற இறக்கமான நிலையே காணப்படுகிறது.

நேற்று தங்கம் விலை மீண்டும் உயர்ந்திருந்த நிலையில், இன்று அதிரடியாக குறைந்துள்ளது. நேற்றைய நிலவரப்படி, 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.120 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.14,360-க்கும், சவரனுக்கு ரூ.960 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,14,880-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இன்றைய நிலவரம்
இந்நிலையில், இன்று தங்கம் விலையில் குறிப்பிடத்தக்க அளவு சரிவு ஏற்பட்டுள்ளது. அதன்படி, 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.170 குறைந்து, ஒரு கிராம் ரூ.14,190-க்கும், சவரனுக்கு ரூ.1,360 குறைந்து, ஒரு சவரன் ரூ.1,13,520-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,360 குறைந்திருப்பது நகை வாங்க காத்திருப்போருக்கு சற்று ஆறுதலை அளித்துள்ளது.
அதேபோல், 18 காரட் தங்கத்தின் விலையும் இன்று குறைந்துள்ளது. 18 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.170 குறைந்து, ஒரு கிராம் ரூ.11,960-க்கும், சவரனுக்கு ரூ.1,360 குறைந்து, ஒரு சவரன் ரூ.95,680-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

மறுபுறம், வெள்ளி விலையில் இன்று எந்தவித மாற்றமும் ஏற்படவில்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.255-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2,55,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |