செப்டம்பரில் பெரிய கிரக மாற்றங்கள்: இந்த ராசிகளுக்கு பம்பர் லாபம், அதிர்ஷ்டம் அதிகரிக்கும்
செப்டம்பர் மாதத்தில் பெரிய கிரகமாற்றங்கள் நிகழ உள்ள நிலையில், அதிர்ஷ்டத்தை பெறும் 5 ராசிகள் குறித்து தெரிந்து கொள்வோம்.
ஜோதிட சாஸ்திரப்படி செப்டம்பர் மாதம் மிக முக்கிய மாதமாக பார்க்கப்படுகின்றது. ஏனெனில் இந்த மாதத்தில் 4 கிரகங்கள் இடம் மாறப்போகின்றது.
ஆம் மேஷத்தில் குரு பகவானின் வக்ர பெயர்ச்சியாகும். இது தவிர புதனும் சுக்கிரனும் இந்த மாதத்தில் தங்கள் இயக்கங்களை மாற்றும். இந்த மாதம் சூரியன் மட்டும் தனது ராசியை மாற்றுவார். இதனால் சில ராசிகளுக்கு நல்ல விடயங்கள் நடைபெறும்.
கிரக மாற்றம்
செப்டம்பர் 4, 2023 அன்று, சுக்கிரன் கடக ராசியில் வக்ர நிவர்த்தி அடைகின்றார். இதே போன்று அதே தேதியில் குரு பகவான் மேஷத்தில் வக்ர பெயர்ச்சி அடைவாராம்.
மேலும் செப்டம்பர் 16, 2023 அன்று புதன் சிம்ம ராசியில் வக்ர நிவர்த்தி அடையும் நிலையில், அதற்கு மறுநாள் 17ம் தேதி சூரியன் கன்னி ராசியில் பெயர்ச்சி ஆவார். செப்டம்பர் 24 2023 அன்று செவ்வாய் கன்னி ராசியில் அஸ்தமன நிலைக்கு செல்வாராம்.
மேஷ ராசி
செப்டம்பர் மாதத்தில் நிகழும் கிரக மாற்றத்தினால் மேஷ ராசியினர் சிறப்பாக காணப்படுவர். ராகுவின் ஸ்தானத்தாலும் செவ்வாயின் அம்சத்தாலும் மரியாதை கிடைக்கும் இந்த நேரத்தில், யாருடனும் தகராறில் உங்கள் நேரத்தை வீணாக்காதீர்கள்.
ரிஷப ராசி
செப்டம்பர் மாதத்தில் நடக்கும் கிரக மாற்றத்தினால் ரிஷப ராசிகாரர்களின் முன்னேற்றம் படிப்படியாக நடைபெறும். வீட்டில் உள்ள பொருளாதார பிரச்சினை அனைத்தும் மாறுவதுடன், பணவரவு அதிகரிக்கும். நிதிநிலையும் நன்றாக இருக்குமாம்.
சிம்ம ராசி
சீறி வரும் சிம்ம ராசியினர் செப்டம்பர் மாத கிரக மாற்றத்தினால் அமோக ஆதரவு கிடைக்கும். வேலையில் முன்னேற்றம், வருமானங்கள் அதிகரிப்பதுடன், நிதி நிலையும் எந்தவொரு பாதிப்பில்லாமல் இருக்கும்.
துலாம் ராசி
துலாம் ராசியில் செப்டம்பர் மாத கிரக மாற்றத்தினால் வெற்றி கிடைப்பதுடன், இதற்காக பல முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும். வேலையில் பொறுமையுடன் செயல்பட்டால் வெற்றியை எளிதாக தட்டித் தூக்கலாம். பரிவர்த்தனை செய்யும் போது கவனமாக இருப்பது நல்லது. நிதி நிலையை பொறுது்தவரையில் நன்றாக இருக்கும்.
விருச்சிக ராசி
விருச்சிக ராசியினரை பொறுத்தவரையில், வேலையில் பிஸியாக இருப்பதுடன், பணியிடத்தில் பணிச்சுமை அதிகமாக இருக்கும். தடைபட்ட வேலைகளை முடிப்பதற்கு வாய்ப்பு கிடைக்கும். இந்த நேரத்தில் செலவுகள் அதிகமாக காணப்பட்டாலும், பண பற்றாக்குறை ஏற்படாதாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |