தொடர்ந்து சரியும் தங்கம் விலை - இன்றைய நிலவரம் இதோ!
இன்றைய (செப்டம்பர் 23) தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம் குறித்த விரிவான தகவல்களை இந்த பதிவில் பார்க்கலாம்.
செப்டம்பர் மாத தொடக்கம் முதலே தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து வரும் நிலையில், இன்றும் விலை சரிந்திருப்பது நகை வாங்குவோர் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது.

நேற்றைய நிலவரப்படி, 22 காரட் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.85 குறைந்து ரூ.14,185 ஆகவும், ஒரு சவரனுக்கு ரூ.680 குறைந்து ரூ.1,13,480 ஆகவும் விற்பனை செய்யப்பட்டது.
இன்றைய நிலவரம்
இந்த நிலையில், இன்றும் 22 காரட் தங்கத்தின் விலை மேலும் குறைந்துள்ளது. அதன்படி, ஒரு கிராமுக்கு ரூ.50 குறைந்து ரூ.14,135 ஆகவும், ஒரு சவரனுக்கு ரூ.400 குறைந்து ரூ.1,13,080 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

18 காரட் தங்கத்தின் விலையும் சரிவு இதேபோல், 18 காரட் தங்கத்தின் விலையிலும் இன்று சரிவு பதிவாகியுள்ளது. ஒரு கிராமுக்கு ரூ.50 குறைந்து ரூ.11,905 ஆகவும், ஒரு சவரனுக்கு ரூ.400 குறைந்து ரூ.95,240 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையில் மாற்றமில்லை மறுபுறம், வெள்ளியின் விலையில் இன்று எந்தவித மாற்றமும் ஏற்படவில்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.255க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2 லட்சத்து 55 ஆயிரத்திற்கும் விற்பனை செய்யப்படுகிறது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |