சேப்பங்கிழங்கை இப்படி செஞ்சி பாருங்க.. குழந்தைகளுக்கு பிடிக்குமாம்!
குழந்தைகளுக்கு உருளைகிழங்கு என்றால் மிகவும் பிடிக்கும். இதன் காரணமாக மாலை நேர ஸ்நாக்ஸாக உருளைகிழங்கு சிப்ஸ் செய்து கொடுப்பார்கள்.
உருளைகிழங்கு தட்டுபாடாக இருக்கும் போது சேப்பங்கிழங்கை ரோஸ்ட் செய்து உருளைகிழங்கு என கொடுக்கலாம்.
அத்துடன் சேப்பங்கிழங்கை சாம்பார் சாதம், ரசம், சாதம், தயிர் சாதம் போன்றவற்றுடன் சேர்த்து கூட கொடுக்கலாம். சுவை மாறாமல் அப்படியே இருக்கும்.
அந்த வகையில் சேப்பங்கிழங்கை ரோஸ்ட் எப்படி செய்வது என தெரிந்து கொள்வோம்.
தேவையான பொருட்கள்:
* சேப்பங்கிழங்கு - 500 கிராம்
* கடலை மாவு - 2 டீஸ்பூன்
* அரிசி மாவு - 2 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
* எண்ணெய் - தேவையான அளவு
* உப்பு - சுவைக்கேற்ப
செய்முறை
முதலில் தேவையான சேப்பங்கிழங்கை குக்கரில் போட்டு 1 விசில் விட்டு வேக வைத்து கொள்ளவும்.
பின்னர் குக்கரிலில் இருக்கும் கிழங்கை எடுத்து தோலை நீக்கிவிட்டு, ஒவ்வொன்றையும் வட்டத் துண்டுகளாக வெட்டி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
இது ஒரு புறம் இருக்கையில், கடலை மாவு, அரிசி மாவு, மிளகாய் தூள், மல்லித் தூள், மஞ்சள் தூள், சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
கிழங்கை கலவையில் போட்டு சரியாக 20 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும்.
இதன் பின்னர் அடுப்பில் ஒரு வாணலியை வைத்து எண்ணெய் விட்டு ஊற வைத்த கிழங்கை போட்டு கிளறி விடவும்.
மிதமான தீயில் அடுப்பை வைத்து விட்டு சேப்பங்கிழங்கை கருகாமல் சரியாக பார்த்து இறக்கினால் சுவையான சேப்பங்கிழங்கு ரோஸ்ட் தயார்!
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
