செந்தில் ராஜலட்சுமியின் குழந்தைகளா இது? செம்ம ஸ்டைலாக மாறிய புகைப்படம்
சூப்பர் சிங்கர் மூலம் பிரபலமான செந்தில் மற்றும் ராஜலட்சுமி ஜோடிகள் தங்களது குழந்தைகளின் புகைப்படத்தினை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.
செந்தில் மற்றும் ராஜலட்சுமி
பிரபல ரிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தனது திறமையினை வெளிப்படுத்திய கிராமிய பாடகர்கள் தான் செந்தில் மற்றும் ராஜலட்சுமி ஜோடிகள்.
இவர்களின் கிராமிய நாட்டுப்புறப்பாடல்களை யாராலும் அடித்துக் கொள்ள முடியாது. இவர்கள் பாடிய சின்ன மச்சான் பாடல் பட்டி தொட்டியெங்கும் வைரலானதையடுத்து இந்த ஜோடியும் பயங்கர வைரலாகினர்.
பின்பு தனது திறமையினால் வெள்ளித்திரைக்கு சென்ற இவர்கள் தங்களது சொந்த ஊரான புதுக்கோட்டையில் பிரம்மாண்டமான வீடு கட்டியுள்ளனர்.
மேலும் இந்த தம்பதிகளுக்கு ஒரு ஆண் மற்று பெண் குழந்தைகள் உள்ளனர். இவர்களுக்கு சமீபத்தில் காதணி விழாவையையும் நடத்தியுள்ளனர்.
இவர்கள் தனியாக யூடியூப் சேனல் ஒன்றினை தொடங்கியுள்ளதோடு, அதில் அடிக்கடி காணொளிகளையும் வெளியிட்டு வருகின்றனர்.
நீண்ட நாட்களுக்குப் பின்பு வளர்ந்திருக்கும் தங்களது குழந்தைகளுடன் குடும்ப புகைப்படத்தினை வெளியிட்டுள்ளனர். இதனை அவதானித்த ரசிகர்கள் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர்.