வரலாறு காணாத அளவில் இந்திய பங்கு சந்தை புதிய உச்சம்.... மகிழ்ச்சியில் முதலீட்டாளர்கள்
மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 1,030 புள்ளிகள் வரை உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டது. இன்றைய வர்த்தக நேர இறுதியில் பிஎஸ்இ சென்செக்ஸ் 958 புள்ளிகள் உயர்ந்து 59,885 புள்ளிகளில் நிறைவடைந்தது. நிப்டி 276 புள்ளிகள் உயர்ந்து 17,800 புள்ளிகளில் நிறைவடைந்தது.
இன்றைய நிலவரப்படி காலை தொடங்கி மும்பை மற்றும் தேசியப் பங்குச் சந்தைகளில் தொடங்கிய வர்த்தகம் முதல்முறையாக 60 ஆயிரம் புள்ளிகளை தாண்டியது.
வர்த்தக தொடக்கத்தில் சென்செக்ஸ் 400 புள்ளிகள் உயர்ந்து 60,285 புள்ளிகளில் வர்த்தகமானது. தேசிய பங்குச்சந்தை குறியிட்டெண் நிப்டியும் 122 புள்ளி அதிகரித்து 17,945 என்ற புதிய உச்சத்தை எட்டியது.
இன்றைய வர்த்தக தொடக்கத்தில் 400 புள்ளிகள் உயர்ந்து வணிகமாகிறது சென்செக்ஸ். வட்டி குறைப்பு குறித்த அமெரிக்க மைய வங்கியின் தகவலால் உலகெங்கும் பங்குச்சந்தைகளில் உயர்ந்துள்ளது.
பங்குச்சந்தைகளில் நிலவும் உயர்வால் பங்கு மதிப்பு உயரும் என்பதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும், இந்திய பங்குச்சந்தைகள் வரலாறு காணாத அளவில் ஏற்றம் கண்டுள்ளதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.