இப்படியும் சேமியாவில் அடையா? ஒரு முறை சாப்பிட்டா விடவே மாட்டீங்க! செய்வது எப்படி?
பொதுவாக காலை உணவில் பல டிஷ்களை செய்து சாப்பிட்டு இருப்போம். ஆனால் இதில் ஒரு வெரைட்டி தான் சேமியா அடை. குறைந்த நேரத்திலேயே எளிமையாக செய்து விடலாம்.
தேவையான பொருட்கள்
சேமியா – ஒரு கப், தயிர் – ஒரு கப், அரிசி மாவு – ஒரு கப், மிளகாய்த்தூள் – அரை ஸ்பூன், வெங்காயம் – 1, உப்பு – முக்கால் ஸ்பூன், எண்ணெய் – 5 ஸ்பூன் கொத்தமல்லி தழை – ஒரு கொத்து.
செய்முறை விளக்கம்
முதலில் அடுப்பில் ஒரு கடாயை வைத்து, அதில் ஒரு கப் சேமியாவை சேர்த்து பொன்னிறமாக வறுத்துக் கொள்ள வேண்டும்.
பின் வேறு பாத்திரத்திற்கு மாற்றிக்கொள்ள வேண்டும். பின்னர் இதனுடன் ஒரு கப் தயிர் சேர்த்து நன்றாக கலந்து விட்டு, 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
அத்தோடு, ஒரு வெங்காயம் மற்றும் கொத்தமல்லியை பொடியாக நறுக்கிக் கொள்ளவேண்டும். அடுத்ததாக கடாயில் அரை ஸ்பூன் எண்ணெய் சேர்த்து நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்க்க வேண்டும்.

பிறகு இதனை லேசாக வதக்கிக் கொண்டு, சேமியாவுடன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். இத்தோடு தேவையான அளவு உப்பு மற்றும் அரை ஸ்பூன் மிளகாய்த்தூள் இவற்றையும் சேர்த்து நன்றாக கலந்துவிட வேண்டும்.
இறுதியாக நறுக்கி வைத்துள்ள கொத்தமல்லி தழைகளையும் சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும். அவ்வளவு தான் தோசைக்கல்லை வைத்து நன்றாக சூடானதும் அதில் அரை ஸ்பூன் எண்ணெய் சேர்த்து தடவி விட வேண்டும்.
பிறகு கலந்து வைத்துள்ள சேமியா கலவையிலிருந்து கொஞ்சமாக எடுத்து, தோசைக்கல்லில் அடை போன்று தட்டிக் கொள்ள வேண்டும்.
சிறிது நேரத்தில் நன்றாக வெந்ததும் திருப்பிப் போட்டு, அடுப்பை சிறிது நேரம் சிம்மில் வைத்து கொள்ள வேண்டும். பிறகு அடையை ஒரு தட்டில் மாற்றிக்கொண்டு, சுடச்சுட பரிமாறினால் சுவையான சேமியா அடை ரெடி...!