செம மாடனாக குக் வித் கோமாளியில் களமிறங்கிய செம்பருத்தி ஷபானா! புதிய பதிவு என்ன தெரியுமா?
செம்பருத்தி சீரியலின் மூலமாக இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வந்த ஷபானா தற்போது செம மோடனாக மாறி குக் வித் கோமாளியில் களமியிறங்கியிருக்கிறார்.அவர் தற்போது நீல நிற ட்ரெண்டிங் உடையில் வெளியிட்டுள்ள காணொளி இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றது.
நடிகை ஷபானா
செம்பருத்தி சீரியல் மூலம் பார்வதியாக சின்னத்திரை ரசிகர்கள் மனதில் நீங்காதாத இடம் பிடித்தவர் தான் நடிகை ஷபானா.
செம்பருத்தி சீரியல் மக்களின் அமோக வரவேற்பை பெற்றதுடன் ஷபானாவின் அடையாளமாகவே அது மாறிவிட்டது என்றால் மிககையாகாது.
இன்றும் இவரின் பெயரை பார்வதி என நினைப்பவர்கள் ஏராளம். அந்தளவுக்கு அந்த கதாப்பாத்திரம் பெரும்பாலான ரசிகர்களின் மனங்களில் நீங்காத இடத்தை பிடித்துவிட்டது.
அதனை தொடர்ந்து பிரபல தொலைக்பாட்சியில் ஒளிபரப்பான மிஸ்டர் மனைவி என்ற தொடரில் நடித்தார். ஆனால் அதில் இருந்து இடையிலேயே வெளியேறிவிட்டார்.
ஷபானா பாக்கியலட்சுமி சீரியல் புகழ் நடிகர் ஆர்யனை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.கடும் எதிர்ப்புகளையும் மீறி இருவரும் மகிழ்சியான திருமண வாழ்க்கையை கழித்துவருகின்றனர்.
தற்போது விஜய் தொலைக்காட்சி ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்து காத்திருந்த குக் வித் கோமாளி 6வது சீசன் ஆரம்பமாகியுள்ளது. அதில் குக்காக ஷபானா களமிறங்கியுள்ளார்.
கூடவே செம்பருத்தியில் பார்வதிக்கு மாமியாரான பிரியா ராமனும் பங்கேற்றுள்ளமை ரசிகர்களின் எதிர்பார்வை அதிகரித்துள்ளது.
இந்நிலையில் குக் வித் கோமாளியின் முதல் நான் ஷோவுக்கு செம கிளாமராக தயாரான ஷபானா குறித்த காணொளியை தற்போது தனது சமூக வலைத்தள பக்கத்தில் ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளார். குறித்த காணொளி தற்போது இணையத்தில் காட்டு தீயாய் பரவி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |