பரிதாப நிலையில் காணொளி வெளியிட்ட செம்பருத்தி கார்த்திக்: ரசிகர்களிடம் கேட்கும் உதவி
செம்பருத்தி சீரியலில் நடித்து மக்களிடம் பெரும் வரவேற்பினை பெற்ற கார்த்திக் ராஜ் நிதி உதவி கேட்டு காணொளியினை வெளியிட்டுள்ளார்.
பிரபல ரிவியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் தொடரில் அறிமுகமான கார்த்திக் ராஜ், அடுத்து அதே தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘ஆஃபீஸ்’ தொலைக்காட்சியில் நடித்து பிரபலமானார்.
பின்பு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான செம்பருத்தி சீரியலில் நடித்து ரசிகர்களின் பெரும் ஆதரவினைப் பெற்ற இவர் திரைப்படத்தில் நடிப்பதற்காக சீரியலிலிருந்து விலகினார்.
இவர் ஏற்கனவே நடித்த திரைப்படங்களான ’465’, ’நாலு பேருக்கு நல்லதுன்னா எதுவும் தப்பில்ல’ ஆகிய திரைப்படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறாத நிலையில் ரம்யா பாண்டியனுடன் ஜோடி சேர்ந்து ‘முகிலன்’ என்ற வெப்சீரிஸில் நடித்தார். இதுவும் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை.
இந்நிலையில், அண்மையில் காணொளி ஒன்றை வெளியிட்ட கார்த்திக் ராஜ் தனது தற்போதைய நிலையினைக் கூறி ரசிகர்களிடம் நிதி உதவி திரட்டி வருகின்றார். இதுகுறித்த அவரது விளக்கமான காணொளி இதோ....